வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 3 மார்ச், 2017

புதிதாகப் பிறந்தவர்

மூன்று வருடங்களுக்கு மேல் நீங்கள் உயிர்வாழமுடியாது!
மூளையும் சிந்தனையும் தவிர உடலின் எந்தப் புலன்களும் செயல்படாது!
என அடுத்தடுத்த இடிகள் அவரது தலையில் விழுந்தன. அரிய வகை நரம்புநோய் அவரைத் தாக்கியது. துன்பத்தின் எல்லையில் மருத்துவனையில் இருந்தவருக்கு அவர் சேர்க்கப்பட்ட எதிர் அறையில் ஒரு சிறுவன் உடல்நலக்குறைவால் சேர்க்கப்படுகிறான். சில நாட்களிலேயே அவன் இறந்துவிடுகிறான். இந்த நிகழ்வு அந்த மனிதருக்கு மனதில் பெரிய பெரிய கேள்விகளை எழுப்பியது. அவர் நினைத்தார்..
அவனை விட நான் நல்வாய்ப்புப் பெற்றவன்! என் உடல் என் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், என் மூளையும் சிந்தனையும் முழுமையான ஆற்றலுடன் செயல்படுகிறது என்று…
அவர்தான்  ஸ்டீபன் ஹாக்கிங்!
வரலாற்றுக்கே  திருப்புமுனையான ‘A Brief History of Time’  என்ற நூலை எழுதியவர். காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரது கட்டுரைகள் அறிவியல் உலகின் மாபெரும் படைப்புகள்!
இவரது மந்திரச் சொல்,
எதை இழந்தீர்கள் என்பதல்ல! எது மிச்சம் இருக்கிறது!
அந்த சிறுவனின் மரணம் இவர் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அன்று அந்த சிறுவன் இறந்தான் என்றால் ஹாக்கிங் தனக்குள் புதிதாகப் பிறந்தார்.

இன்றுவரை அறிவியலின் பல புதிர்களுக்குப் பதிலளிக்கும் புதிராக விளங்குகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!



10 கருத்துகள்:

  1. திருப்புமுனை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் எப்படி புரட்டிப் போட்டுள்ளது என்பதை படிக்கையில் ஆர்வமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
  2. ஸ்டீபன் ஹாக்கிங் நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன்
    நம்பிக்கை மனிதர் என்றால் இவர்தானே
    எல்லாம் இருந்தும், இல்லை இல்லை முடியவில்லை
    யாரும் உதவவில்லை, நேரம் கூட வில்லை எனப் புலம்பும்
    மனிதர்களுக்கு இடையும்,
    எதுவுமே இல்லாத போது,உடலின் உறுப்புகள் இயங்காதபோதும்
    சாதித்துக் காட்டிய மனிதர்
    போற்றுதலுக்கு உரிய முன்னுதாரனம்
    இன்றைய மாணவர்களிடம் இவர் பற்றியச் செய்திகளைக்
    கொண்டு போய் சேர்க்க வேண்டும்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. திருப்புமுனை என்பது
    ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்
    பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும்
    ஊக்க மாத்திரையே!

    பதிலளிநீக்கு
  4. அருமையான சாதனையாளரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு