3.7 கோடிப் புத்தகங்கள்! மற்றும் அச்சுப் பிரதிகள்,
35 லட்சத்துக்கும் அதிகமான ஒலிப் பதிவு ஆவணங்கள்!
1.4 கோடிப் புகைப் படங்கள்!
55 லட்சம் வரைபடங்கள், ஓவியங்கள்
470 மொழிகளில்..
16 கோடி தொகுப்புகள்!
470 மொழிகளில்..
16 கோடி தொகுப்புகள்!
838 மைல் நீள நூலகத்தின் புத்தக அலமாரிகள்!
இந்நூலகத்தின் கிளை அலுவலகங்கள் டெல்லி, கெய்ரோ, ரியோ டி ஜெனிரோ
போன்ற உலகின் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.
என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட அமெரிக்காவின் தலைசிறந்த
நூலகங்களில் ஒன்று லைப்ரரி ஆப் காங்கிரஸ்!
நாடாளுமன்றத்துக்குப் பயனுள்ள புத்தகங் களை வாங்கிச்
சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 5,000 டாலரை ஒதுக் கினார் அப்போதைய அதிபர்
ஜான் ஆடம்ஸ்.
1800 ஏப்ரல் 24-ல் இந்த நூலகம் தொடங்கப் பட்டது. 12
ஆண்டுகள் கழித்து, தலைநகர் வாஷிங்டனுக்குள் நுழைந்த பிரிட்டன் இராணுவம், நகரைத்
தீக்கிரையாக்கியது. இதில் இந்த நூலகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் எரிந்து
சாம்பலாயின.
முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், தனது சொந்த நூலகத்திலிருந்து
புத்தகங்களைத் தந்து நூலகத்தைப் புதுப்பிக்க உதவினார். அவர் நடத்திவந்த அவரது
சொந்த நூலகம்தான் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா விலேயே மிகப் பெரிய நூலகம். 2
முறை அதிபராக இருந்த காலகட்டத்தில் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகத்தை
விரிவாக்கும் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர் அவர்.
1851-ல் மீண்டும் ஒரு தீவிபத்து ஏற்பட்டது. இதில்
நூலகத்தின் மூன்றில் ஒரு பகுதி நூல்கள் எரிந்து நாசமாயின. தாமஸ் ஜெபர்ஸன் கொடுத்த
பல நூல்களும் தப்பவில்லை. இந்த முறை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவாகச் செயல்பட்டு
புத்தகங்களைச் சேகரித்து மீண்டும் புதுப்பித்தது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இன்னும்
அதிகமான எண்ணிக்கையில் புத்தகங்கள் சேகரிக்கப் பட்டன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக்
காவின் அறிவிக்கப்படாத தேசிய நூலக மாகவும், உலகின் மிகப் பெரிய நூலகமாகவும்
விரிவடைந்திருந்தது ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகம்.
நூலக இணையதள முகவரி - https://www.loc.gov/
அறிஞர்களுக்கு விருந்தளிக்கும்
பதிலளிநீக்குஅருமையான நூலகம் பற்றிய தகவல்
நன்றி நண்பரே
நீக்குசிறப்பான தகவல்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முனைவரே....
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்கு