பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 16 மார்ச், 2017

பில்கேட்சு என்னும் நிரலாளர்!


உலக கோடிசுவரர்கள் பட்டியலில் 12 ஆண்டுகளாக முதலிடம்!
13 வயதில் கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றவர்.
மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உருவாக்கி ஹார்வர்டு பல்கலைக்கழகப் படிப்பைப் பாதியில் விட்டவர். என்றாலும் அவரது உழைப்பு அவருக்கு அதே பல்கலைக்கழகத்திடமிருந்து  டாக்டர் பட்டத்தைப் பெற்றுத்தந்தது. ஆம் அவர்தான் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்சு.
இயங்குதளம், ஆபீசு தொகுப்புகள், உலவி, தேடுபொறி என பல துறைகளிலும் இவரின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் காலத்துக்கு ஏற்ப தம் தயாரிப்புகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் இவரின் திறனே இவர் இத்துறையில் மாபெரும் சாதனையாளராக இருப்பதன் அடிப்படையாக உள்ளது.

1999 ல் இவர், The Road Ahead, Business @ the Speed of Thought என்ற நூலை எழுதினார் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் இந்நூல் விற்பனையாகிறது.
1975 ல் ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி இருக்கவேண்டும் என ஆசைப்பட்டார் பில்கேட்சு. அவரது கனவின் உயரமே இன்று அவரின் சாதனையின் உயரம்!

இன்று அவரது நிறுவனத்தில், 85 நாடுகளில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகிறார்கள்
பள்ளியில் படித்த காலத்தில் கணக்கு மற்றும் அறிவியல் துறையின் மீது அளவுகடந்த ஆர்வமிருந்தது. இருந்தாலும் தந்தையைப் போல வழக்கறிஞராக ஆகவேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது.
 13 வயதில் கணினி மீது இவருக்கு ஏற்பட்ட காதலும் இவருக்கு நண்பராக வாய்த்த பால் ஆலன் என்பவரும் இவர் வாழ்வின் திருப்புமுனை எனலாம்.
“பில்கேட்சின் போட்டியாளர்கள் குறிவைப்பது
பெரிய பெரிய நிறுவனங்களை,
ஆனால் பில்கேட்சு குறிவைப்பதே
சராசரி மக்களையும் அவர்களின் தேவையையும்!”
சமூக மாற்றத்தை உற்றுநோக்குதல், மக்களின் தேவையைப் புரிந்துகொள்தல் அதற்கான தீர்வுகளை யாராவது கண்டுபிடிப்பார்கள் என்று காத்திருக்காமல் தாமே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்ற பண்புகளை பில்கேட்சின் வாழ்க்கை தரும் பாடமாக நாம் கொள்ளலாம்.


6 கருத்துகள்:

  1. மக்களின் தேவையைப் புரிந்துகொள்தல் அதற்கான தீர்வுகளை யாராவது கண்டுபிடிப்பார்கள் என்று காத்திருக்காமல் தாமே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்

    போற்றுதலுக்கு உரிய பண்பு
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு

  2. பில்கேட்ஸ் பற்றிய தகவல்
    பலருக்கு வழிகாட்டல்
    தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும்
    நல்லதோர் எடுத்துக்காட்டு!

    பதிலளிநீக்கு