வாய்மையே வெல்லும் என்பதுதான் இந்தியாவின் குறிக்கோள். என்றாலும்,
ஊழல் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம். வியட்நாம் இரண்டாம் இடத்தையும், தாய்லாந்து மூன்றாவது இடத்தையும்
பெறுகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் கடைசியில்தான் முதலிடம் பிடிப்போம்
என்றாலும், கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம். இரண்டாவது இடத்தில்
ஆத்ரேலியாவும் மூன்றாவது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் உள்ளன.
சீனா கடைபிடிக்கும் மொழிக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, தொழில்நுட்பப்
புரட்சி என எதையுமே போட்டியாக நினைக்காதவர்கள் இந்தியர்கள் இருந்தாலும் சீனாவின் மக்கள்
தொகையோடு மட்டும் போட்டிபோட்டு வருகிறோம். அதனால்
உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம்
இந்தியாவுக்கு, சீனா முதலிடத்திலும்,
அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகள், வானொலிகள்,
சமூகத் தளங்கள் என அதன் வளர்ச்சிக்கு ஒன்றும் குறையில்லை. என்றாலும்,
பொய்யான செய்திகளை
வழங்குவதில் இந்திய ஊடகம் உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ளதாக
ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. மூன்றாவது இடத்தில் அயர்லாந்து
வன்பொருள், மென்பொருள், திறன்பேசி என பெரிதும்
நம் நாட்டின் கண்டுபிடிப்புகள் கிடையாது. என்றாலும்,
இணையப்
பயன்பாடுகள் வரிசையில் இரண்டாவது
இடத்தில் இந்தியா, முதலிடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும்
உள்ளன.
ஒருவனுக்கு ஒருத்தி என்போம்! கற்பில் சிறந்தவள் யார் என்று பட்டிமன்றங்கள்
வைப்போம் என்றாலும்,
எச்.ஐ.வி. பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா
தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், நைஜீரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
பெண்கள் நாட்டின் கண்கள் என்போம், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம்
செய்திடல் வேண்டும் என்போம், இருந்தாலும், உலகில் பெண்களுக்குப்
பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு
நான்காவது இடம் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது
ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.
சங்ககாலம் தொடங்கிய ஏறுதழுவுதல் முதல் பல விளையாட்டுகளைக் கொண்ட
நாம் கிரிக்கெட் மட்டுமே பெரிதெனக் கொண்டாடுகிறோம். அதனால் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் உலக அளவில் நான்காவது இடத்தில் இந்தியா. முதலிடத்தில் தென்ஆப்பிரிக்காவும் இரண்டாவது இடத்தில் ஆத்ரேலியாவும் உள்ளன.
·
உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் 41 வது இடத்தில் இந்தியா, முதலிடத்தில் ஜெர்மனியும், இரண்டாவது இடத்தில் பெல்ஜியமும் உள்ளன.
·
தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்கள் எழுந்து
நடந்தால், கல்லூரிகள், விரைந்து நடந்தால் பல்கலைக்கழகங்கள் என எங்கும் வணிகமான கல்வி
இருந்தாலும், எழுத்தறிவில் இந்தியா 233 நாடுகளுள்
168 வது
இடத்தில்! 82 விழுக்காடு ஆண்களும் 65 விழுக்காடு பெண்களும்
எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்தியாவின் மொத்த எழுத்தறிவு 73.8 விழுக்காடு பின்லாந்து,
கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் 100 விழுக்காடு பெற்றுள்ளன
உலகின் தலைசிறந்த
நாடுகள் பட்டியலில் 81 வது இடத்தில் இந்தியா.
மேற்கண்ட இந்தியா பற்றிய
புள்ளிவிவரங்கள் உங்களுக்கு வியப்பளிக்கலாம்.
இந்தியர்களின் பலம் மனிதவளம்,
பலவீனம் அம்மனித வளத்தை நம் நாட்டின்
வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமலிருப்பது.
ஆம் இந்தியா வரலாற்றைப் புரட்டிப்
பார்த்தால் எத்தனை எத்தனை போர்க்களங்கள் எல்லாம் நம் நாட்டின் வளத்துக்கான படையெடுப்புகள்!
இன்றும் அந்தப் படையெடுப்புகள் தொடர்கின்றன. அதன் வடிவங்கள் தான் மாறியிருக்கின்றன.
நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம்
நாம் யாருக்கும் அடிமையில்லை என்று சொல்லிக்கொண்டாலும் இன்னும் நம் நாட்டில் நடப்பது
பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஆட்சிதான்!
மெக்காலே கல்வி என்றபெயரில்
நம் குருகுலக்கல்விமுறையை ஒழித்து தாய்மொழியைப் பறித்து நம்மை இன்னும் ஆங்கில மொழிக்கு
அடிமைகளாக, சுயசிந்தனையற்றவர்களாக வைத்திருப்பதில் இருக்கிறது நாம் ஏன் அடிமையானோம் என்ற கேள்விக்கான பதில்!