வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

சுதந்திர தின சிறப்புக் கவிதை

இதுவா சுதந்திரம்

கல்வி!
அன்று கல்வி கற்கப் பெற்ற சுதந்திரம்
இன்று கல்வியை விற்க!
இதுவா சுதந்திரம்? இதற்கா சுதந்திரம்?

சாதி!
அன்று பாரதி பாடினார்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
இன்றும் மாறவில்லை
கல்விக்குக் கூட சாதிகேட்கும் அவலம்!
இதுவா சுதந்திரம்? இதற்கா சுதந்திரம்?

அரசியல்!
அன்று வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம்
இன்று கொள்ளைக்காரர்களிடம்!
இதுவா சுதந்திரம்? இதற்கா சுதந்திரம்?

மக்கள்!
அன்று அந்நியருக்கு அடிமைகளாய்
இன்று அந்நியப் பொருள்களுக்கு அடிமைகளாய்!
இதுவா சுதந்திரம்? இதற்கா சுதந்திரம்?

மொழி!
அன்று தமிழ் பேசப் பெற்ற சுதந்திரம்
இன்று தமிழைப் புறக்கணிக்க!
இதுவா சுதந்திரம்? இதற்கா சுதந்திரம்?

உழைப்பு!
அன்று தாய்நாட்டைக் காக்கப் பெற்ற சுதந்திரம்
இன்று பிறநாடுகளில் உழைக்க!
இதுவா சுதந்திரம்? இதற்கா சுதந்திரம்?

சிந்திக்க வேண்டிய நிலையில் நாம்…

சுதந்திர நாட்டின் அடிமைகளாய் இன்னும் நாம்..
தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தைப் பேசிக்கொண்டு
மண்ணின் மரபுகளை, பண்பாடுகளை மறந்து..
ஆட்டு மந்தைகளாய்…

சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகால சாதனைகள்…
மக்கள் தொகையில் இரண்டாவது இடம்!
தற்கொலையில் 11 வது இடம்!
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் 4வது இடம்!
இதுவா சுதந்திரம்? இதற்கா சுதந்திரம்?

இனியாவது சிந்திப்போம்…
அன்று சுதந்திரம் பெற அரும்பாடுபட்டார்கள்..
இன்று அதைப் பாதுகாக்க நாம் பெரும்பாடுபட்டாகவேண்டும்!
சுதந்திரம் அடைந்தது உண்மையென்றால்
இனியாவது சிந்திப்போம் வல்லரசாவோம் 2020ல்!

செல்வி செ. சத்யா

இளங்கலை கணிதவியல் மூன்றாமாண்டு

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

திருச்செங்கோடு



4 கருத்துகள்:

  1. சிந்திக்க வைத்த கவிதை.
    சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. கொத்துக் கொத்தாக
    உண்மையைச் சொல்லும்
    முத்தான வரிகள்

    பதிலளிநீக்கு
  3. நல்லதோர் கவிதை.

    சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை, முகத்தில் அறைந்தது போலிருந்தது. செல்வி செ. சத்யா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு