· தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கோட்டையூரில் பிறந்தவா்.
· காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்தவா்
· இந்தியக் குடியரசுத் தலைவரான இராதாகிருஷ்ணன் அவா்களுடன் தோழமை கொண்டிருந்தவா்.
· காரைக்குடியைக் கல்விக் குடியாக்கியவா்.
· திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை
ஏற்படுத்த 1943ஆம்
ஆண்டு ஒரு இலக்கம் ரூபாய்கள் நன்கொடை வழங்கியவா்.
· 1947ஆம் ஆண்டு நடந்த அன்னி பெசண்ட் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு
விடுத்த அழைப்பினை ஏற்று காரைக்குடியில் காந்திமாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை
மூன்று நாட்களுக்குள் நிறுவினார்.
· அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவை காரைக்குடியில் அழகப்பா
வளாகத்தில் 15 இலக்கம் ரூபாய் மதிப்புள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பினை நன்கொடை
அளித்து நடுவண் அரசின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவ இணங்கச்
செய்தார்.இவரது இந்த நன்கொடையைப் பாராட்டி நேரு இவரை சோசலிச முதலாளி என்று
புகழ்ந்தார்.1953ஆம் ஆண்டுசனவரி 14 அன்று இந்நிலப்பரப்பில் மத்திய மின் வேதியியல்
ஆய்வுக் கழகத்தை (CECRI) இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
திறந்து வைத்தார்.
· ஆம் அவா்தான் வள்ளல் இராம.அழகப்பச் செட்டியார். நான்
எந்த மேடையிலும் பெருமிதத்துடன் சொல்வதுண்டு நான் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தயாரிப்பு என்று. பலதுறைகளிலும்
கால்பதித்து வெற்றிகண்ட அழகப்பா் அவா்கள் கல்விக்கு ஆற்றிய பணியால் காரைக்குடியே
கல்விக்குடியானது. இராம.அழகப்பச் செட்டியாரின் மறைந்த தினமான இன்று
அவரது கல்விப் பணியை நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறேன்.
தொடா்புடைய இடுகை
எதிா்பாராத பதில்கள்
தொடா்புடைய இடுகை
எதிா்பாராத பதில்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக