வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 4 மார்ச், 2016

கணித்தமிழ்த் திரட்டி



தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் என்ற நோக்குடன் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழகம், முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் அதன் இணைவுபெற்ற கல்லூரிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை உருவாக்கவும் அதனைத் தொடர்ந்து நடத்த ஆதார நிதியும் வழங்கி நெறிப்படுத்திவருகிறது. இந்தக் கணித்தமிழ்ப்பேரவைகளில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி, தமிழில் வலைப்பதிவுகள் எழுதுதல், தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் பங்கு பெறுதல், தமிழ்க் குறுஞ்செயலிகள் உருவாக்கம், தமிழ் மென்பொருள் உருவாக்கம், தமிழ்க் காணொளி உருவாக்கம் எனப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் கணித்தமிழ்ப் பேரவைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்தக் கணித்தமிழ்த் திரட்டி உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் கல்லூரியில் செயல்படும் கணித்தமிழ்ப் பேரவையின் செயல்பாடுகளை தங்கள் கல்லூரி வலைப்பதிவின் வழி உலகறியச் செய்யலாம். தங்கள் கல்லூரி வலைப்பதிவின் முகவரியை gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இந்தத் திரட்டியின் வழியாக ஒருங்கிணைக்கவுள்ளோம்.

காலத்தை வெல்வோம் கணித்தமிழ் வளா்ப்போம்

8 கருத்துகள்:

  1. பயனுள்ள பகிர்வை தாங்கள் பகிர்ந்துள்ளீர் ஐயா.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள பணித்திட்டம்
    எல்லோரும்
    இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. முயற்சிக்கு வாழ்த்துகள். ஏற்கெனவே உள்ள திரட்டிகளில் நாம் என்னென்ன குறைகளைக் காண்கிறோமோ, அவற்றைக் களைந்து, இன்னும் திட்டமிடடதாய் இருந்தால் விரைந்து வளர வாய்ப்பு உண்டு. இல்லையேல் பத்தோடு பதினொன்றாகிப் பயனில்லை. நீங்கள் சிந்தித்துச் செயல்படக் கூடியவர். செயற்கரிய செய்க. எனது வலைப்பக்க இணைப்பை அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு