திங்கள், 29 பிப்ரவரி, 2016
உன்னைப் பற்றி நீ!
நம்மைப் பற்றி மற்றவா்கள் என்ன நினைக்கிறாா்கள் என்றுதான் நாம் பெரிதும் கவலைப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பது குறித்து சிந்திப்பவா்கள் சிலரே. வள்ளுவர் தம் குறளில், நாம் எப்போதும் உயா்வு குறித்த எண்ணவேண்டும் என்கிறாா்.
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து - 596
எண்ணுவதெல்லாம் உயா்வைப் பற்றியே எண்ணவேண்டும். அந்த உயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதைக் கைவிடக்கூடாது.
குறளுக்கான படம் தேடுவது ஒரு வகைத் தேடல்.
படத்துக்கான குறள் தேடுவது இன்னொரு வகை இந்தக் குறள் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனதில் தோன்றியது.
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
வெள்ளி, 26 பிப்ரவரி, 2016
வியாழன், 25 பிப்ரவரி, 2016
புதன், 24 பிப்ரவரி, 2016
செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
திங்கள், 22 பிப்ரவரி, 2016
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016
100 = 1000
அன்பான தமிழ்
உறவுகளே வணக்கம்.
1000 இடுகைகள்
எழுதியவுடன் எனக்குள் ஒரு இலக்குவைத்துக்கொண்டேன். சமூகத்தளங்களில் ஆங்கிலத்தில்
எழுதும் பலரையும் தமிழில் எழுதவைக்கவேண்டும் என்பதுதான் அது. அதனால் பல
கல்லூரிகளுக்கும் சென்று தமிழ்த்தட்டச்சு பற்றியும், தமிழில் வலைப்பதிவு எழுதுதல்,
விக்கிப்பீடியாவில் எழுதுதல் குறித்தும் உரையாற்றி வருகிறேன். தமிழ்
இணையப்பல்கலைகழகத்தின் அறிவுறுத்தலுக்கிணங்கி எங்கள் கல்லூரியில் கணித்தமிழ்ப்
பேரவை ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் எங்கள் மாணவிகளுக்கு,
தமிழ்தட்டச்சுப்
பயிற்சி, வலைப்பதிவில் தமிழ் எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல், குறுஞ்செயலி
உருவாக்கம், உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துவருகிறேன். கணித்தமிழ்ப் பேரவையின்
உறுப்பினர்களாக விண்ணப்பித்திருந்த 100 மாணவிகளுள் முதல்கட்டமாக 50 மாணவிகளுக்கு மட்டும்
இந்தப் பயிற்சி வழங்கிவருகிறேன். இந்த 50 மாணவிகளும் எங்கள் கல்லூரியின்
வலைப்பதிவில் எழுதிவருகிறார்கள். இவா்கள் கடந்த 3 மாதங்களில் 100 இடுகைகள்
எழுதியிருக்கிறார்கள். நான் எழுதிய 1000 இடுகைகளைவிட மதிப்புடையனவாக இந்த 100
இடுகைகளைக் கருதுகிறேன். ஏனென்றால் இந்த மாணவிகள் வெவ்வேறு துறை சார்ந்தவா்கள்,
சமூகத்தளங்களில் பெண் படைப்பாளிகள் ஆண்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாத இந்த
நிலையில் இப்படி பெண் படைப்பாளிகளாக இம்மாணவிகள் தமிழ் எழுதுவது பெரிதென்று
கருதுகிறேன். வலைப்பதிவில் நன்கு எழுதும் பயிற்சி பெற்ற இவா்கள் புதிய
மாணவிகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன் தற்போது விக்கிப்பீடியாவில் எழுதும் பயிற்சி
பெற்று வருகிறார்கள். கல்லூரியின் வலைப்பதிவில் சிறப்பாக எழுதிய மாணவிகளை கல்லூரி வலைப்பதிவின் ஆசிரியராக்குவதுடன் எனது வலையில் சிறப்பு விருந்தினராக தமது வலையை அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் வழங்கவுள்ளேன்.
எங்கள் வலையில்
எழுதும் மாணவிகளின் படைப்புகளை பலரும் மறுமொழிகளால் ஊக்குவித்து வருகின்றனா்.
குறிப்பாக எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு சொற்பொழிவாளராக வந்த கவிஞர்
முத்துநிலவன் ஐயா அவா்கள் எங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் செ.வைசாலி
என்ற வணிகவியல் முதலாமாண்டு மாணவியைப் பாராட்டி நூல் வழங்கி சிறப்பித்தார். எங்கள்
கல்லூரியின் ஆண்டுவிழாவில் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த செயல்பாட்டுக்காகப்
பாராட்டி இம்மாணவிக்கு கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும் வழங்கி
எங்கள் முதல்வர் ஊக்குவித்தார்.
தம்மின்
தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிக் கெல்லாம்
இனிது. (68)
எவ்வளவு
சரியாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர். நான் பெற்ற வெற்றிகளைவிட நான் அடைந்த உயரங்களைவிட என்
மாணவிகள் அடையும் உயரங்களால் என்மனம் எவ்வளவு மகிழ்வடைகிறது.
இந்த 100
இடுகைகள் என் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறன. இந்த மாணவிகளுக்கு நான்
சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நீங்கள் கற்றுக்கொண்டதை 10 பேருக்கு எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் கற்றுக்கொடுங்கள் என்பதுதான்.
இணையத்தில்
தமிழ் எழுதுவோம். தமிழின் பெருமையை உலகத்துக்கு எடுத்துச் சொல்வோம்.
எங்கள் கல்லூரியின் வலைப்பதிவு
சனி, 20 பிப்ரவரி, 2016
வெள்ளி, 19 பிப்ரவரி, 2016
வியாழன், 18 பிப்ரவரி, 2016
வெள்ளி, 12 பிப்ரவரி, 2016
வியாழன், 11 பிப்ரவரி, 2016
செவ்வாய், 9 பிப்ரவரி, 2016
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
சனி, 6 பிப்ரவரி, 2016
வியாழன், 4 பிப்ரவரி, 2016
புதன், 3 பிப்ரவரி, 2016
செவ்வாய், 2 பிப்ரவரி, 2016
திங்கள், 1 பிப்ரவரி, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)