பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 29 அக்டோபர், 2015

கணித்தமிழ்ப் பேரவை தொடக்கம்


தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து 

இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள 

பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற 

கல்லூாிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு 

கேட்டுக்கொண்டுள்ளன.  அதற்கிணங்க,


                        கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியில், 

தாளாளா் அாிமா கே.எஸ்.ரங்கசாமிஎம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், 

செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா 

சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா் 

மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை 

இனிதே தொடங்கப்பட்டது.

 கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக,  முனைவா் இரா.குணசீலன் அவா்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாா்.


கணித்தமிழ்ப் பேரவையின் நோக்கங்கள்....

1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்....

சனி, 17 அக்டோபர், 2015

கண்ணதாசன் ஓவியம்



நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த 



நிலையிலும் எனக்கு மரணம் இல்லை !


என்று பாடிய கவியரசா் கண்ணதாசன் அவா்களை 

மனக்கண்முன் நிறுத்தும் உயிரோட்டான ஓவியம் 

வரைந்தவா் 

சு.லாவண்யா இளங்கலை வேதியியல் 

மூன்றாமாண்டு.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

அன்பான தமிழ் உறவுகளே..

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்         
              பரவும் வகை செய்தல் வேண்டும்”                            
  
 “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்  
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்”

என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் எங்கள் கல்லூரியின் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து “தமிழ் மற்றும் ஆங்கில எழுத்தாளர்கள் பார்வையில் இயற்கை” என்ற தலைப்பில் பன்னாட்டு அளவிளான கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தமிழ், ஆங்கில இலக்கியங்களின் சிறப்பியல்புகளை ஒப்பீட்டு முறையில் அறிந்துகொள்ளும் முயற்சியாக இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கம் சிறப்பாக நடைபெறத் தாங்கள் துணைநிற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்



வெள்ளி, 2 அக்டோபர், 2015

இப்படியொரு விழாவைப் பாா்த்திருக்கிறீா்களா?

விழா என்பது பண்பாட்டின் அடையாளமாக,

 செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக,

புதுமையின் வடிவமாக

வெள்ளிவிழா, தங்கவிழா, வைர விழா என பல்வேறு விழாக்கள் 

காலந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் மொழிக்கென 
நடத்தப்படும் விழாக்கள் அவ்விழாக்களுள் 
என்றுமே தனிச்சிறப்புடையன. 

ஏனென்றால் மற்ற விழாக்கள் ஒரு தனிமனிதனின் 

செல்வச்செழிப்பையோ, பதவி மற்றும் நட்புவட்டத்தின் சிறப்பையோ 

காட்டுவதாக அமையும். 

ஆனால் தமிழ் மொழிக்கென நடத்தப்படும் 

விழாக்கள். 

தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு''

என்று தமிழ் இனத்தின் மாண்பை இயம்புவதாக அமைவதே தமிழ் 

விழாக்களின் தனிச்சிறப்புகளாகும். 

தமிழ் மொழிக்கென நடத்தப்படும் 

விழாக்களுள், காலத்துக்கு ஏற்ப தமிழின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் 

கொண்டு நடத்தப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழா வரலாற்றில் ஒரு 

குறிப்பிடத்தக்க விழாவாக அமைகிறது. 


முச்சங்கம் வைத்ததும் 

மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.

மின் வெளியில்

வலைமொழியில் 

சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.

யாதும் ஊராக யாவரும் கேளிராக 

உலகு பரவி வாழும் தமிழர்களை 

இணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க 

வேண்டும்!

என்ற முழக்கத்துடன் 

கொண்டாடப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழாவுக்கு 

வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.


செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுக்கோட்டை வலைப்பதிவா் திருவிழாவின் நோக்கங்கள்


தமிழ் மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை அதன் தொடா்ச்சியிலும் உள்ளது. வாழத்தகுதியுள்ளன மட்டும் வாழும் அல்லன செத்து மடியும் என்ற கோட்பாடு உயிர்களுக்கு மட்டும் இல்லை மொழிகளுக்கும் தான். காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மொழி மட்டுமே வாழும். அவ்வடிப்படையில் தமிழ்மொழியானது, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாக இருந்து இன்று இணையத்தமிழ் என்ற நான்காவது தமிழாகத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு காலத்தால் அழியாத மொழிகளின் பட்டியலில் செம்மாந்து நிற்கிறது.

       இணையத்தமிழ் வளா்ச்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் இணையத்தமிழ் மாநாடுகளும், பதிவா் சந்திப்புகளும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றன. ஈரோடு, மதுரை, சென்னை என பல்வேறு ஊா்களில் ஏற்பட்ட பதிவா் சந்திப்புகள் இணையத்தில் பதிவா்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், தேவைகளையும் குறித்து விவாதித்தன. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில் வலைப்பதிவுகளின் நோக்கும், போக்கும் குறித்து விவாதிக்கப்பட்டன. 2010 ஆண்டில் நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில் வலைப்பதிவுகளுடன், முகநூல் உள்ளிட்ட சமூகத்தளங்களில் தமிழ்மொழிப்பயன்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்ன.

கடந்த ஏழு ஆண்டுகளாக வலைப்பதிவில் தொடா்ந்து எழுதிவருவதால் பல்வேறு மாற்றங்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அம்மாற்றங்களுள் குறிப்பிடத்தக்க மாற்றம் என்றால்,
கூகுள்+, முகநூல்,டுவைட்டா், வாட்சாப் போன்ற சமூகத்தளங்களுடன் போராடி வலைப்பதிவுகள் பின்னடைவைச் சந்தித்ததைக் குறிப்பிட இயலும். இருந்தாலும் முகநூல் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் முன்பே வலைப்பதிவுகளில் எழுதிய செய்திகளைத்தான் மீள்பதிவு செய்தனா் என்பதை தொடர்ந்து இணையத்தில் வாசிப்பவா்கள் நன்கு அறிவார்கள். 

 பிறமொழிகளுடன் ஒப்பிடும்போது இணையத்தில்  சொந்தமாக தமிழில் தட்டச்சு செய்து ஒரு செய்தியை வெளியிடுபவா்களைவிட காப்பி, பேஸ்ட் செய்து வெளியிடுபவா்களே அதிகமாக உள்ளனா். அதனால் பிற மொழிகளுக்கு இணையாக விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தமிழ்க்கட்டுரைகள் குறைவாகவே உள்ளன. அதனால் இணையத்தை, சமூகத் தளங்களைப் பயன்படுத்தும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட யாவரும் தமிழிலேயே தட்டச்சு செய்து செய்திகளைப் பகிர்ந்துகொள்வது காலத்தின், நம் தமிழ்மொழியின் முதன்மையான தேவையாகிறது. அவ்வடிப்படையில் இந்த புதுக்கோட்டையில் நடைபெறும் பதிவா் திருவிழாவை புதிய பல முயற்சிகளின் ஒட்டுமொத்த வடிவமாகவே பார்க்கமுடிகிறது.
       இதுவரை நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில் பெற்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பதிவர் சந்திப்பு மிகவும் செம்மையாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இந்த பதிவா் சந்திப்பை ஊக்குவிப்பது பதிவா்களை மேலும் ஆற்றலுடன் செயல்பட துணைபுரிவதாகவுள்ளது. இந்தப் பதிவா் சந்திப்பில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டி அறிவிப்புகளைக் காணும்போது சில ஆண்டுகளுக்கு முன்னா் தமிழ்மணம் திரட்டி நடத்திய போட்டிகள் கண்களில் நிழலாடுகின்றன. அக்காலகட்டத்தில் அந்தப் போட்டிகள் வலைப்பதிவா்களிடையே திருவிழா போன்ற உணா்வை ஏற்படுத்தின.
  
புதுக்கோட்டை பதிவா் சந்திப்பின் தனிச்சிறப்புகளாக...

  (1) கவிதை ஓவியக் கண்காட்சி 
    (2)    பதிவர்களின் அறிமுகம்
    (3)    தமிழிசைப் பாடல்கள்
    (4)    நூல்வெளியீடுகள்
    (5)    குறும்பட வெளியீடுகள்
    (6)    20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
    (7)    தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு  
    (8)    பதிவர்களுக்கான போட்டிகள்  பரிசுகள்   
    (9)    புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
   (10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை ஆகியன பதிவா் திருவிழாவின் தனிச்சிறப்புகளாக உள்ளன. மேலும்,

·         புதிய பதிவா்களை இணையத்தில் தமிழ் எழுதஊக்குவித்தல்
·         தமிழ் எழுது மென்பொருள்கள் குறித்த அறிமுகம்
·         தமிழ்த் தட்டச்சு முறைகள்
·  வலைப்பதிவா் கையேடு வழி தொடா்ந்து எழுதுவோரை அடையாளம் கண்டுகொள்ளுதல்.
·         திரட்டிகளில் இணைத்தல்
·         விக்கிப்பீடியாவில் எழுதுதல்
·         வலைப்பதிவுக்கும் – இணையத்துக்கும் – முகநூல் – வாட்சாப் போன்ற ஊடகங்களில் எழுதுவதற்குமான வேறுபாடுகளை எடுத்தியம்புதல்.
·         தேடு இயந்திரங்களின் செயல்பாடுகள்.

போன்ற புதிய பதிவர்களின் சந்தேகங்களை போக்கிக்கொள்ளவும், அனுபவமிக்க பதிவா்களின் அனுபவங்களை எடுத்தியம்பவும் வாய்ப்பளிப்பதாக இருந்தால் இந்த பதிவா் சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும் என்று கருதுகிறேன்.

பேசுவது குறைந்து, கேட்பதும் குறைந்து, வாசிப்பு வழக்கமும் குறைந்து உலகமே முகநூலிலும், வாட்சாப்பிலும் மூழ்கிவரும் இந்த தொழில்நுட்ப காலத்தில் நகலெடுத்து ஒட்டும், (கட், காப்பி, பேஸ்ட்) வழக்கமும், யாரோ பகிர்ந்ததை பகிர்வது, லைக் செய்வது என்பதும் தன் உணா்வுகளை இருமொழி கலந்து எழுதுவது, ஸ்மைலி என்னும் உணா்வுக் குறியீட்டு மொழியில் வெளியிடுவதும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற பதிவா் மாநாடுகள் கட்டாயமான தேவையாக அமைகின்றன. இதுபோன்ற பதிவா் திருவிழாக்கள் வழியாக இணையத்தில் தமிழில் எழுதவேண்டும் என்ற அடிப்படையான எண்ணம் ஊட்டப்படுவதுடன், பேச்சு எழுத்தாகவும், எழுத்து நூலாகவும், நூல் வரலாற்றின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது என்ற சிந்தனை விதைக்கப்படுகிறது.

இந்த பதிவா் திருவிழா நம்ம வீட்டு திருவிழா என்ற உணா்வோடு நான் கலந்துகொள்ள ஆா்வமாக உள்ளேன். நீங்களும் வாங்க... சந்திக்கலாம்.

(இடம் -புதுக்கோட்டை,

தேதி -11-10-2015   கிழமை - ஞாயிறு  

விழா - வலைப்பதிவர் திருவிழா-2015”)

போட்டிகள் குறித்த அறிவிப்பு..  கவிஞா் நா.முத்துநிலவன் ஐயா 

அவா்களின் இந்த வலையில் வளரும் கவிதை