விழா என்பது பண்பாட்டின் அடையாளமாக,
செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக,
புதுமையின் வடிவமாக
வெள்ளிவிழா, தங்கவிழா, வைர விழா என பல்வேறு விழாக்கள்
காலந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ் மொழிக்கென
நடத்தப்படும் விழாக்கள் அவ்விழாக்களுள்
என்றுமே தனிச்சிறப்புடையன.
ஏனென்றால் மற்ற விழாக்கள் ஒரு தனிமனிதனின்
செல்வச்செழிப்பையோ, பதவி மற்றும் நட்புவட்டத்தின் சிறப்பையோ
காட்டுவதாக அமையும்.
ஆனால் தமிழ் மொழிக்கென நடத்தப்படும்
விழாக்கள்.
தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு''
என்று தமிழ் இனத்தின் மாண்பை இயம்புவதாக அமைவதே தமிழ்
விழாக்களின் தனிச்சிறப்புகளாகும்.
தமிழ் மொழிக்கென நடத்தப்படும்
விழாக்களுள், காலத்துக்கு ஏற்ப தமிழின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில்
கொண்டு நடத்தப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழா வரலாற்றில் ஒரு
குறிப்பிடத்தக்க விழாவாக அமைகிறது.
முச்சங்கம் வைத்ததும்
மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.
மின் வெளியில்
வலைமொழியில்
சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.
யாதும் ஊராக யாவரும் கேளிராக
உலகு பரவி வாழும் தமிழர்களை
இணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க
வேண்டும்!
என்ற முழக்கத்துடன்
கொண்டாடப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழாவுக்கு
வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.
அருமையான வரவேற்பு அழகியலோடு!!! மிக்க நன்றி! சந்திப்போம்...புதுகையில்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே சந்திப்போம்.
நீக்குஅழைப்பிதழுடன் தங்கள் பாணி அழைப்பு அருமை
பதிலளிநீக்குபுதுகையில் சந்திப்போம்
நன்றி நண்பரே
நீக்குமாறுப்பட்ட முறையில் எளிமையான அதே நேரத்தில் அருமையான அழைப்பு பதிவு. இதுக்குதான் பேராசிரியராக இருக்கணும் என்பது
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதமிழ் என்றும் வாழும்! நன்றி முனைவரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅற்புதமான அழைப்பு!
பதிலளிநீக்குத ம 4
நன்றி நண்பரே
நீக்குஅழைப்பில் என்ன சொல்கிறோம் என்பதும், எப்படிச் சொல்கிறோம் என்பதும்தானே முக்கியம்? நீங்கள் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் நண்பரே! மிக்க மகிழ்ச்சி. சந்திக்கும் ஆவலுடன் இருக்கிறோம். நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநன்றி நண்பரே
பதிலளிநீக்குபுதுகையில் சந்திப்போம்
சந்திப்போம் நண்ரே.
நீக்குநன்றி நண்பரே
பதிலளிநீக்குநீண்ட காலமாக தரமான வலைபதிவுகள் எழுதி வருபவர் தாங்கள் . விழாவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஎழுத்தால் அறிமுகமான தங்களைப் போன்ற பல பதிவா்களையும் நேரில் பார்க்கும் ஆர்வத்தில் நானும் உள்ளேன் நண்பரே.
நீக்குஅழைப்பினை அருமையாக பகிர்ந்தீர்கள் ஐயா.
பதிலளிநீக்கு