புதன், 30 செப்டம்பர், 2015
செவ்வாய், 29 செப்டம்பர், 2015
திங்கள், 28 செப்டம்பர், 2015
ஞாயிறு, 27 செப்டம்பர், 2015
வியாழன், 24 செப்டம்பர், 2015
புதன், 23 செப்டம்பர், 2015
செவ்வாய், 22 செப்டம்பர், 2015
புதுக்கோட்டை வலைப்பதிவா் திருவிழாவின் நோக்கங்கள்
தமிழ் மொழியின்
சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை அதன் தொடா்ச்சியிலும் உள்ளது. வாழத்தகுதியுள்ளன
மட்டும் வாழும் அல்லன செத்து மடியும் என்ற கோட்பாடு உயிர்களுக்கு மட்டும் இல்லை மொழிகளுக்கும்
தான். காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மொழி மட்டுமே வாழும். அவ்வடிப்படையில்
தமிழ்மொழியானது, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாக இருந்து இன்று இணையத்தமிழ் என்ற
நான்காவது தமிழாகத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு காலத்தால் அழியாத மொழிகளின் பட்டியலில்
செம்மாந்து நிற்கிறது.
இணையத்தமிழ் வளா்ச்சியில்
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் இணையத்தமிழ் மாநாடுகளும், பதிவா் சந்திப்புகளும்
குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றன. ஈரோடு, மதுரை, சென்னை என பல்வேறு
ஊா்களில் ஏற்பட்ட பதிவா் சந்திப்புகள் இணையத்தில் பதிவா்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும்,
தேவைகளையும் குறித்து விவாதித்தன. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில் வலைப்பதிவுகளின்
நோக்கும், போக்கும் குறித்து விவாதிக்கப்பட்டன. 2010 ஆண்டில் நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில்
வலைப்பதிவுகளுடன், முகநூல் உள்ளிட்ட சமூகத்தளங்களில் தமிழ்மொழிப்பயன்பாடுகள் குறித்தும்
விவாதிக்கப்பட்ன.
கடந்த ஏழு ஆண்டுகளாக
வலைப்பதிவில் தொடா்ந்து எழுதிவருவதால் பல்வேறு மாற்றங்களையும் சந்திக்கும் வாய்ப்பு
எனக்கு கிடைத்தது. அம்மாற்றங்களுள் குறிப்பிடத்தக்க மாற்றம் என்றால்,
கூகுள்+, முகநூல்,டுவைட்டா்,
வாட்சாப் போன்ற சமூகத்தளங்களுடன் போராடி வலைப்பதிவுகள் பின்னடைவைச் சந்தித்ததைக் குறிப்பிட
இயலும். இருந்தாலும் முகநூல் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் முன்பே வலைப்பதிவுகளில்
எழுதிய செய்திகளைத்தான் மீள்பதிவு செய்தனா் என்பதை தொடர்ந்து இணையத்தில் வாசிப்பவா்கள்
நன்கு அறிவார்கள்.
பிறமொழிகளுடன் ஒப்பிடும்போது இணையத்தில் சொந்தமாக தமிழில் தட்டச்சு செய்து ஒரு செய்தியை வெளியிடுபவா்களைவிட
காப்பி, பேஸ்ட் செய்து வெளியிடுபவா்களே அதிகமாக உள்ளனா். அதனால் பிற மொழிகளுக்கு இணையாக
விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தமிழ்க்கட்டுரைகள் குறைவாகவே உள்ளன. அதனால் இணையத்தை, சமூகத்
தளங்களைப் பயன்படுத்தும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட யாவரும் தமிழிலேயே தட்டச்சு செய்து
செய்திகளைப் பகிர்ந்துகொள்வது காலத்தின், நம் தமிழ்மொழியின் முதன்மையான தேவையாகிறது.
அவ்வடிப்படையில் இந்த புதுக்கோட்டையில் நடைபெறும் பதிவா் திருவிழாவை புதிய பல முயற்சிகளின்
ஒட்டுமொத்த வடிவமாகவே பார்க்கமுடிகிறது.
இதுவரை நடைபெற்ற பதிவா் சந்திப்புகளில் பெற்ற
அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பதிவர் சந்திப்பு மிகவும் செம்மையாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக்
காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
இந்த பதிவா் சந்திப்பை ஊக்குவிப்பது பதிவா்களை மேலும் ஆற்றலுடன் செயல்பட துணைபுரிவதாகவுள்ளது. இந்தப் பதிவா் சந்திப்பில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டி அறிவிப்புகளைக் காணும்போது சில ஆண்டுகளுக்கு முன்னா் தமிழ்மணம் திரட்டி நடத்திய போட்டிகள் கண்களில் நிழலாடுகின்றன. அக்காலகட்டத்தில் அந்தப் போட்டிகள் வலைப்பதிவா்களிடையே திருவிழா போன்ற உணா்வை ஏற்படுத்தின.
புதுக்கோட்டை பதிவா் சந்திப்பின்
தனிச்சிறப்புகளாக...
(1) கவிதை ஓவியக் கண்காட்சி
(2) பதிவர்களின் அறிமுகம்
(3) தமிழிசைப் பாடல்கள்
(4) நூல்வெளியீடுகள்
(5) குறும்பட வெளியீடுகள்
(6) 20க்கும் மேற்பட்ட பதிவர்
விருதுகள்
(7) தமிழ்வலைப்பதிவர் கையேடு
வெளியீடு
(8) பதிவர்களுக்கான போட்டிகள் – பரிசுகள்
(9) புகழ்பெற்ற சான்றோர்
சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின் புத்தகக்
கண்காட்சி, விற்பனை ஆகியன பதிவா் திருவிழாவின் தனிச்சிறப்புகளாக
உள்ளன. மேலும்,
·
புதிய
பதிவா்களை இணையத்தில் தமிழ் எழுதஊக்குவித்தல்
·
தமிழ்
எழுது மென்பொருள்கள் குறித்த அறிமுகம்
·
தமிழ்த்
தட்டச்சு முறைகள்
· வலைப்பதிவா்
கையேடு வழி தொடா்ந்து எழுதுவோரை அடையாளம் கண்டுகொள்ளுதல்.
·
திரட்டிகளில்
இணைத்தல்
·
விக்கிப்பீடியாவில்
எழுதுதல்
·
வலைப்பதிவுக்கும்
– இணையத்துக்கும் – முகநூல் – வாட்சாப் போன்ற ஊடகங்களில் எழுதுவதற்குமான வேறுபாடுகளை
எடுத்தியம்புதல்.
·
தேடு
இயந்திரங்களின் செயல்பாடுகள்.
போன்ற புதிய பதிவர்களின்
சந்தேகங்களை போக்கிக்கொள்ளவும், அனுபவமிக்க பதிவா்களின் அனுபவங்களை எடுத்தியம்பவும்
வாய்ப்பளிப்பதாக இருந்தால் இந்த பதிவா் சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும்
என்று கருதுகிறேன்.
பேசுவது குறைந்து, கேட்பதும் குறைந்து, வாசிப்பு வழக்கமும் குறைந்து
உலகமே முகநூலிலும், வாட்சாப்பிலும் மூழ்கிவரும் இந்த தொழில்நுட்ப காலத்தில் நகலெடுத்து
ஒட்டும், (கட், காப்பி, பேஸ்ட்) வழக்கமும், யாரோ பகிர்ந்ததை பகிர்வது, லைக் செய்வது
என்பதும் தன் உணா்வுகளை இருமொழி கலந்து எழுதுவது, ஸ்மைலி என்னும் உணா்வுக் குறியீட்டு
மொழியில் வெளியிடுவதும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற பதிவா் மாநாடுகள் கட்டாயமான
தேவையாக அமைகின்றன. இதுபோன்ற பதிவா் திருவிழாக்கள் வழியாக இணையத்தில் தமிழில் எழுதவேண்டும்
என்ற அடிப்படையான எண்ணம் ஊட்டப்படுவதுடன், பேச்சு எழுத்தாகவும், எழுத்து நூலாகவும், நூல்
வரலாற்றின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது என்ற சிந்தனை விதைக்கப்படுகிறது.
இந்த பதிவா் திருவிழா
நம்ம வீட்டு திருவிழா என்ற உணா்வோடு நான் கலந்துகொள்ள ஆா்வமாக உள்ளேன். நீங்களும் வாங்க...
சந்திக்கலாம்.
(இடம் -புதுக்கோட்டை,
தேதி -11-10-2015 கிழமை - ஞாயிறு
விழா - “வலைப்பதிவர் திருவிழா-2015”)
போட்டிகள் குறித்த அறிவிப்பு.. கவிஞா் நா.முத்துநிலவன் ஐயா
அவா்களின் இந்த வலையில் வளரும் கவிதை
திங்கள், 21 செப்டம்பர், 2015
சனி, 19 செப்டம்பர், 2015
வெள்ளி, 18 செப்டம்பர், 2015
புதன், 16 செப்டம்பர், 2015
செவ்வாய், 15 செப்டம்பர், 2015
திங்கள், 14 செப்டம்பர், 2015
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
வியாழன், 10 செப்டம்பர், 2015
புதன், 9 செப்டம்பர், 2015
செவ்வாய், 8 செப்டம்பர், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)