வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

கடல் மணலும் - மனிதர் வாழ்வும்!




புகழ்பெற ஆட்சி செய்து மறைந்த மன்னர்களே, கடல் மணலைப் போல 

காலவெள்ளத்தில் கணக்கில் கொள்ளப்படுவார்கள் என்றால்,

சராசரியாக வாழ்ந்து மறையும் மனிதர்கள் இக்காலவெள்ளத்தில் 

கணக்கில் கொள்ளப்படுவார்களா?

என்ற பெரிய வினாவை முன்வைக்கிறது இந்த மதுரைக் காஞ்சி அடிகள்.