பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 25 டிசம்பர், 2014

கணிதப்பெண்ணுக்கு வந்த காதல் கடிதம்

கணிதமேதை இராமனுசம் அவர்களின் பிறந்தநாளன்று மாணவர்கள், இராமானுசம் அவர்களின் பணியை நினைவுகொள்ளும் விதமாக கவிதை கட்டுரை பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபெற்று தம் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இன்றைய மாணவர்கள் கணிதத்தை மனப்பாடம் செய்துதான் படிக்கிறார்கள்!

இல்லை இல்லை புரிந்துதான் படிக்கிறார்கள் என்ற தலைப்புகளை முன்வைத்து விவாதகளமும் நடந்தது. இவர்களுக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு மாணவர்களின் முயற்சியும் பாராட்டுதலுக்குரியது என்றாலும் கங்கா என்ற மாணவர் எழுதிய கவிதை பலரது பாராட்டுதலையும் பெற்றதாக அமைந்தது.

தமிழில் பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களில் கடவுளையோ, அரசரையோ, வள்ளல்களையோ குழந்தையாகப் பாவித்து பாடுவது மரபாகும். அதுபோல இந்த மாணவர் கணிதத்தைப் பெண்ணாகப் பாவித்து பாடிய கவிதை,  கணிதம் என்ற பாடத்தின் மீது இவருக்கு எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.