பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 24 செப்டம்பர், 2014

அரிதினும் அரிது கேள்...


பெரிதினும் பெரிது கேள் என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியைப் படிக்கும்போதும் ஔவையின்,

ரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!

என்ற பாடலைப் படிக்கும்போதும்,

 அரிதினும் அரிது எது? என்ற கேள்வி மனதில் தோன்றியது.
தமிழ்மொழிக்கு மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் வள்ளுவர், தமிழ் என்ற சொல்லை ஒரு முறை கூடப் பயன்படுத்தவில்லை. இருந்தாலும் சில சொற்களைப் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். 

அரிது என்ற சொல்லை எத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்த்தேன். 29 முறை வெவ்வேறு விளக்கங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.

அரிது என்ற சொல்லை இவர் ஏன் இத்தனை குறள்களில் பயன்படுத்தியிருக்கிறார்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு குறள்களையும் வாசிக்கும் போது, வள்ளுவர் சொல்லும் ஒவ்வொரு சிந்தனைகளும் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு மதிப்புமிக்கன என்பது புரிகிறது.

மறக்கவேண்டியவற்றை நினைவுகொள்வதும்
நினைக்கவேண்டியவற்றை மறந்துவிடுவதும் தானே மனித இயல்பு!

மனித சமூகம் தெரிந்தும் சில மரபுகளைப் பின்பற்றத் தவறுகிறது என்பதை உணர்ந்தே வள்ளுவப் பெருந்தகை அரிது என்ற சொல்லை இத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று தோன்றியது.

குறள்களைக் காண்போம்...












17 கருத்துகள்:

  1. மிகவும் நன்றாக உள்ளது

    பதிலளிநீக்கு
  2. அரிது அரிது ....
    நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துக்கள் சகோ...!

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே
    உலகத் தமிழ் இணைய மாநாட்டில் பேசிய தங்களின் படம் கண்டேன்
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அருமை! குறித்தும் வைத்துக் கொண்டோம் நண்பரே! நேரமிருந்தால் வலைச்சரம் வந்து எட்டிப் பாருங்களேன்! நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. அரிது பற்றிய அரிதான பதிவை அறியத் தொகுத்தளித்த விதம் அருமை!
    பகிர்விற்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  7. அன்பிற்கினிய முனைவருக்கு வணக்கம்,
    நீண்ட நாட்கள் கழித்து இணையம் ..
    வருகிறேன்.
    நலம் தானே?
    தமிழ் என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தாதிருப்பது
    ஆச்சர்யமே முனைவரே...
    அரிது எனும் சொல்லில் எத்தனை குறள்கள்...
    அனைத்திலும் வெவ்வேறு பயன்பாட்டில்...
    அருமையான விளக்கம் சொன்னீர்கள்...
    உங்கள் பதிவுகள் கூட எனக்கு அரிதான ஒன்று தான் முனைவரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே நலம், நலமறிய ஆவல்.
      தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

      நீக்கு
  8. அருமையான பதிவு முனைவரே தொடர்க ;..

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு தொகுப்பு முனைவரே...

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு