பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஆசிரியர் தின சிறப்புக் கவிதை



ஆசிரியர்களைப் போற்றுவோம்..
  
கண்டிப்பான ஆசிரியர்கள் உன்னைக் கண்டிப்பது
நீ துன்பப்படவேண்டும் என்பதற்காக அல்ல!
நீ..... உன் வாழ்நாளில்
வேறு யாராலும் கண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்!

வேடிக்கையாகப் பேசும் ஆசிரியர்கள்
உன்னை மகிழ்விப்பது
நீ சிரிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல
உன்னைப் பார்த்து யாரும் சிரித்துவிடக்கூடாது..
சிரிப்புக்கு இடையே நீ சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான்!

எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடையணிவது
தன்னடக்கத்தைக் காட்டுவதற்காக அல்ல!
வாழ்நாளில் நீ
எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்
பகட்டை விரும்பக்கூடாது என்பதற்காகத்தான்.

சில ஆசிரியர்கள் சொன்னதையே
மீண்டும் மீண்டும் சொல்வது நீ
தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல!
நீ வாழ்வில் மதிப்புடையனாக உயரவேண்டும் என்பதற்காகத்தான்!

இந்த உண்மையை உணர்வோம் நம் வாழ்வின் நீங்காத நினைவுச் சின்னங்களான ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவோம்..

கவிதையை எழுதியவர்.


வ. கீர்த்தனா
முதலாமாண்டு கணிதவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

திருச்செங்கோடு.


தொடர்புடைய இடுகை

ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்

10 கருத்துகள்:

  1. பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
    Tha.ma.2

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்! மாணவிக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை..கீர்த்தனாவிற்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!

    உங்களுக்கு இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. பேராசிரியருக்கு உங்கள் மாணவியின் கவிதையை இங்கே கொடுத்து மாணவ சமுதாயத்தின் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையை காட்டியிருக்கிறீர்கள். இந்தப் மாணவியின் கவிதையைப் படித்துவிட்டு எல்லா மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களைப் புரிந்துகொண்டால் எத்தனை நன்றாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  7. மாணவிக்கு பாராட்டுக்கள். ஆசிரியர் தின வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோ உங்களின் வலைப்பூவால் இன்று வலைச்சரம் சிறக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...நன்றி

    பதிலளிநீக்கு