வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 12 ஜூன், 2014

கல்லாதவரும் நல்லவர்களே..

பணத்தை முட்டாள் கூட சம்பாதித்துவிடலாம். ஆனால் ஒரு அறிவாளியால் மட்டுமே அதை பாதுகாக்கமுடியும் என்றொரு பொன்மொழி உண்டு.

காலம் சில முட்டாள்களைப் பணக்காரர்களாக்கி அறிவாளிகளை அவர்களிடம் பணியாற்றவைத்துவிடுகிறது. அப்போது கற்றறிந்த அறிவாளிகள் முன்னிலையில் தன் தகுதியை உணர்ந்து அளவோடு பேசுபவரும், பேசாமலும் இருப்பவரும் மிகவும் நல்லவர்கள்.

இவன் ஒரு முட்டாளோ என்று நாலு பேர் சந்தேகப்பட்டாலும் பரவாயில்லை.வாயைத் திறந்து அந்த சந்தேகத்தை உறுதிப் படுத்துவதைக் காட்டிலும்.  வாயைத்திறவாமல் இருப்பதே மேல் என்ற கருத்தை வள்ளுவப் பெருந்தகை,

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் 
சொல்லா திருக்கப் பெறின்.

என உரைப்பர். அதாவது, கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக         இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார் என்பது இக்குறளின் கருத்தாகும்.


இந்த உண்மை பல பணக்கார முட்டாள்களுக்கும் தெரிவதில்லை. பலநேரங்களில் அறிவாளிகள் முன் பேசி தாம் முட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் கல்லாதவர்களும் மிக நல்லவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

18 கருத்துகள்:

  1. இன்றைய சூழலுக்கு அவசியமானக் குறள்
    எளிய அருமையான விளக்கத்துடன் கூடிய
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே.

      நீக்கு
  2. குறள் விளக்கம் சிறந்த வழிகாட்டல்

    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  4. அருமையான நற் கருத்து குறள் விளக்கத்துடன் ! பகிர்வுக்கு மிக்க நன்றி
    வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  5. உண்மை. நல்லப்பதிவு. வாழ்த்துக்க

    பதிலளிநீக்கு
  6. அருமையான குறளும் விளக்கமும். நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கிரேஸ்

      நீக்கு
  7. குறள் விளக்கம் அருமை முனைவர் ஐயா.

    எனக்கு இந்தக் குறளின் பொருள் கொஞ்சம் பிடிக்காது.

    அதாவது கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக
    இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்

    இதில் கல்லாதவரும் நல்லவரே.... என்கிறார்.
    அப்படியென்றால் கல்லாதவர்கள் கெட்டவர்களா....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வி ஒன்றே தன்னையும் தாம் வாழும் சமூகத்தையும் மாற்றும் மாபெரும் ஆயுதம். இதனை யாவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றே வள்ளுவப் பெருந்தகை இதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார் என்பது எனது கருத்து....

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அருணா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு