வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 4 ஜூன், 2014

குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகிவரும் இன்றைய சூழலில் வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை, நல்ல அறிவுரையாக அமையும்..

கதை சொல்லும் நீதி..

பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்?



வ.வே.சு ஐயரின் நினைவுநாளான இன்று அவரது தமிழ்ப்பணியை எண்ணிப்பார்ப்பதாக இவ்விடுகை அமைகிறது.

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881  ஜூன் 4 1925) இந்தியவிடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
தமிழிலக்கிய பங்களிப்பு
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே .வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.
·         திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
·         குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
·         இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
·         1921-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி (KAMBARAMAYANA -A STUDY) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் 1950 இலேயே நூலாக வெளிவந்தது.கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் 1990 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
·         கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
·         கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
·         பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.
·         லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.
·         மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, "கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
·         பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.

குளத்தங்கரை அரசமரம் என்பது . வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறதுகுளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின்பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும். (குஸும ஸத்ருசம் .....ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.



குளத்தங்கரை அரசமரம் கதையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

கதையில்...


“காற்றுஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோலஓயாமல் கதறிக்   கொண்டேயிருந்தது..“

என்ற உவமையை மிகவும் இரசித்தேன்


5 கருத்துகள்:

  1. சிறப்பான இடுகை ...

    இணைப்பு தந்தமைக்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

      நீக்கு
  2. சிறப்பான பதிவு நண்பரே நன்றி
    வ.வே.சு ஐயரைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

      நீக்கு
  3. வ.வே.சு அய்யர் பற்றிய விரிவான தகவல்கள் தந்தமைக்கு நன்றி முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு