பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 27 ஜூன், 2014

சிரிப்பும் சிந்தனையும்


நான் மருத்துவராகி நாட்டுக்கு சேவை செய்யப்போகிறேன் என்று யாராவது 

சொன்னால் இப்போதெல்லாம் சிரிப்பு தான் வருகிறது.

அரசு நடத்தவேண்டிய கல்விநிலையங்களை தனியார் நடத்துகிறது!

தனியார் நடத்தவேண்டிய மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதன் விளைவாக மருத்துவம் என்பது இன்று அப்பாவி மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது.

பணத்தைக் கொட்டி டாக்டர் பட்டம் வாங்கியதால் இன்றைய மருத்துவர்கள் அதை எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மனிதாபிமானம், சேவை என்பதெல்லாம் இன்றைய மருத்துவர்கள் பலரும் கேள்விப்படாத சொற்களாகவே உள்ளன.

ஆயிரம் வேர்களின் பண்பை அறிந்தவரே அரை வைத்தியர் என்ற பழமொழி இன்று பலராலும் ஆயிரம் பேரைக் கொன்றவர்
 அரை வைத்தியர் என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 

இவர்களின் புரிதல் தவறென எண்ணிவந்த நான் இப்போதெல்லாம் இவர்களின் புரிதல் சரிதான் என்று உணர்கிறேன்.

கடந்த சில நாட்களாக தினமணி நாளிதழில் நான் விரும்பிய சில கேலிச்சித்திரங்கள். (நன்றி தினமணி)






15 கருத்துகள்:

  1. //ஆயிரம் பேரைக் கொண்டவரே அரை வைத்தியர்//

    ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள். எது எப்படியோ இப்போது மருத்துவம் படிப்பது என்பது ஒரு தொழிலை ஆரம்பிக்க முதலீடு செய்வதுபோல் ஆகிவிட்டது.அதனால் தான் போட்ட முதலை எடுக்க படித்து மருத்துவர் ஆனதும் நோயாளிகளிடம் அதிக ஆலோசனைக் கட்டணம் ‘வசூலிக்கிறார்கள்’.

    பதிலளிநீக்கு
  2. இப்போதெல்லாம் மருத்துவரிடம் போவதென்றாலே பயமாக இருக்கிறது..நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களை எப்படி எங்கு கண்டுபிடித்துப் போவது?
    சித்திரங்கள் அருமை..

    பதிலளிநீக்கு
  3. ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    இல்லை
    ஆயிரம் வேரைக் கற்றவர் அரை வைத்தியர்
    ஆமாம்

    பதிலளிநீக்கு
  4. இறுதி நகைச்சுவைக்கு ஏற்ப தான்
    மருத்துவர்கள்
    நோயாளிகளிடம் பணம் திரட்டுகிறார்களோ!

    பதிலளிநீக்கு
  5. மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய…
    http://wp.me/p3oy0k-4S

    என்ற பதிவில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. கேலிப்படங்கள்
    கேட்கின்ற கேள்விகளே
    எம்நாட்டின்
    வேதனையின் கரு !

    கருத்தாளம் கொண்ட நகைச்சுவை

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு