பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 22 ஜூன், 2014

தமிழ் இலக்கிய விளையாட்டு

தமிழ் இலக்கியங்களையும், தமிழர் பண்பாட்டையும் உலகுபரவி வாழும் தமிழர்களுக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக, தமிழ் இலக்கிய விளையாட்டு என்ற தொடரை எழுதவிருக்கிறேன். இத்தொடரில் சில படங்களை வெளியிடுவேன். அந்தப் படம் ஏதோ ஒரு தமிழ் இலக்கியத்தையோ, அவ்விலக்கியத்தில் உள்ள பாடலையோ நினைவுபடுத்துவதாக அமையும். படத்தோடு தாங்கள் கண்டறிவதற்கான குறிப்பையும் வழங்குவேன். தாங்கள் அதைக் கண்டறிந்து மறுமொழியில் தெரிவிக்கவேண்டும். இடுகை வெளியிட்ட மறுநாள் அதன் சரியான பதிலை நான் தெரிவிப்பேன்.

நான் என் மாணவர்களுக்கு விளையாட்டாகப் பாடம் கற்பிக்க பயன்படுத்திய படங்கள் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே இத்தொடரை நான் தொடங்க அடிப்படையாக அமைந்தது. 

இன்று திருக்குறள் மற்றும் பழமொழி குறித்த தேடலாக விளையாட்டு அமைகிறது.


1.
2
3
4

5
6


அன்பான தமிழ் உறவுகளே எனது புதிய முயற்சிக்குத் தாங்கள் தந்த ஊக்கத்துக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறுமொழி வழியே நீங்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த பதில்கள் தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றையும், உங்கள் தமிழார்வத்தையும் எடுத்தியம்புவதாக அமைந்தது.

படங்களுக்கான பதில்கள்.



  1. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
  2. மழலைச்சொல் கேளா தவர்.
    குறள் 66: 

  3. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
  4. நாவினாற் சுட்ட வடு.
    குறள் 129: 

  5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
  6. உள்ளத் தனையது உயர்வு.
    குறள் 595:

  7. நுணலும் தன் வாயால் கெடும்

  8. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,

  9. மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்

39 கருத்துகள்:

  1. 1.குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
    மழலைச்சொற் கேளா தவர்.

    2.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.

    3.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.

    4. நுணலும் தன் வாயால் கெடும்...

    5. ஐந்திலே வளையாதது
    ஐம்பதில் வளையுமா?!

    6 .மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும்
    முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

      நீக்கு
  2. ஆஹா, அருமையான விளையாட்டு. அதற்கு முதற்கண் நன்றி.
    1. குழழினிது யாழினிது என்பர் மக்கட்தம்
    மழழைச் சொல் கேளாதவர்
    2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு
    3.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு
    4.தவளைத் தன் வாயால் கெடும்
    5.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

    ஆறாவது தெரியவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி கிரேஸ்

      நீக்கு
  3. த.ம.2
    உங்கள் முயற்சியும் அதற்கு படங்களைச் சேர்ப்பதும் அருமை ஐயா..வாழ்த்துக்கள்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி கிரேஸ்

      நீக்கு
  4. 1.குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.
    2.தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு.
    3. வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு
    5.ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  5. திருக்குறள்
    1.குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்
    2.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு
    3.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு

    பழமொழி
    1.நுணலும் தன் வாயால் கெடும்
    2.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
    3.மூத்தோர் சொல் வார்த்தையும் முது நெல்லிக்காயும்
    முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

    புதுமையான முயற்சி. விடைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது எனது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்து மகிழ்ச்சியளித்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முயற்சியின் நோக்கமே அதுதான் நண்பரே. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றிகள்.

      நீக்கு
  6. அருமை நண்பரே
    முயற்சித்துப் பார்க்கட்டுமா?
    1,குழலினித யாழினிது .......
    2.நாவினாற் சுட்ட புண் ....
    3.வெள்ளத்தனையாது ...
    4.தவளையும் தன் வாயால்
    5.ஐந்தில் வளையாதது
    6.நெல்லிக்காய்... சாப்பிட்டவருக்கு வைத்தியர் தேவையில்லை
    கடைசி படத்திற்கு மட்டும் சரியான பழமொழி நினைவில் வரவில்லை
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  7. படம் மூலம் பயிற்றுவித்தல்
    த்ங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது நண்பரே
    தொடருங்கள்
    கொடுத்து வைத்த மாணவர்கள்
    தம 6

    பதிலளிநீக்கு
  8. அருமையானதொரு தொடர் போட்டி. தங்களது போட்டியில் கலந்து கொள்ளும் அவகாசம் பலம்பெயர் தமிழர்களான எமக்குப் போதாமையாகவுள்ளது. இப்போட்டியை 'மூன்று நாட்களுக்கு' (72 மணித்தியாலங்கள்) நீடிக்க முடியுமா? ஒவ்வொரு வெள்ளி - சனி -ஞாயிறு' எனவாக அமைந்தால் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பதிவு தாங்கள் விரும்பியவாறே இடுகிறேன் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  9. 1.குழல்இனிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்
    2.தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.
    4.நுணலும் தன் வாயால் கெடும்
    5.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

    மற்ற இரண்டும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  10. 01. குழலோசை இனிமையானது. யாழின் ஓசை இனிமையானது என்பர் தம் குழந்தையின் மழலைச் சொற்களை செவியால் கேட்டு இன்பத்தை அனுபவிக்காத மக்கள்.
    02.தீயினால் சுடப்படுவதால் தோன்றும் வடுவானது விரைவில் மறைந்துவிடும். ஆனால் நாவினால் ஏற்படக்கூடிய வடு என்னும் தீச்சொல் ஆறாத துயரைத்தரும்.
    03. வெள்ளத்தை ஒத்து தாமரையின் தண்டு நீண்டிருக்கும். அதுபோல மாந்தர்களின் உள்ளத்தூய்மையைப் பொருத்தே உயர்வு அமையும்.
    04. நுணலும் தன்வாயல் கெடும்.
    05.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
    06.உள் அம்கை நெல்லிக்கனி போல


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி மெய்யழகன்.
      6.மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்

      நீக்கு
  11. 4.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு

    பதிலளிநீக்கு
  12. 1. குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர் 2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. 3. வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு. 4. தவளை தன் வாயால் கெடும். 5 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
    6வது புதிருக்கு விடை தெரியவில்லை! மிக நல்ல முயற்சி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  13. 1.குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்
    2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு
    3. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத்து அனையது உயர்வு.
    4. நுணலும் தன் வாயால் கெடும்
    5.ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?
    6. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு. இது சரியா தெ
    ரியலையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி உமா. இப்போது பதிலை இடுகையில் பதிவுசெய்துள்ளேன் சரிபார்த்துக்கொள்ளுங்கள் உமா.

      நீக்கு
  14. முதல் குறள் "குழலினிது ... எனத் துவங்கும் குறள்

    இரண்டாவது "தீயினால் சுட்ட புண் ...எனத் துவங்குவது

    மூன்றாவது "வெள்ளத்தனைய மலர் நீட்டம் 'எனத்
    துவங்கும் குறளாக இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  15. காலையிலேயே முயற்சித்தேன் ஆனால் கருத்துரை இடுவது எனக்கு சிரமமாக உள்ளது ஐயா. எதனாலோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பரே தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லையே இப்போது தங்கள் கருத்துரை வந்திருக்கிறதே. இணையவேகத்தின் குறைபாடாகக் கூட இருக்கலாம் நண்பரே.

      நீக்கு
  16. ஆகா ஆக
    அற்புதமான பணி ...
    வாழ்த்துக்கள்
    த.மா பதிமூன்று
    நன்றி
    www.malartharu.org

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே

      நீக்கு
  17. மிக அருமையாக விளையாட்டாக குறள், பழமொழிகளை அழகிய படங்களுடன் சொல்லி தந்து விட்டீர்கள்.
    நான் எளிதாக கண்டு பிடித்து விட்டேன்.

    முன்பு படம் பார்த்து கதை சொல் என்று படங்கள் மூலம் நீதி போதனை கதையை சொல்லி தரும் பாட முறை இருந்தது அது போல் உள்ளது .
    அடிகடி இது போல் சொல்லி தாருங்கள்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. படங்களும் பதில்களும்
    சிறந்த
    இலக்கிய வெளியீடு!
    சிறந்த வழிகாட்டல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே

      நீக்கு
  19. வலைச்சர அறிமுகப் பகிர்வுக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_9.html?

    பதிலளிநீக்கு
  20. நற்றமிழறப்பணி " வெல்ல " வாழ்த்துகிறேன் ...!

    பதிலளிநீக்கு