வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 11 ஜூன், 2014

நீதிவழங்குவோர் வாழும் தெரு



ஏழைகளுக்கு ஒரு நீதி! பணக்காரர்களுக்கு ஒரு நீதி! அரசியல்வாதிக்கு ஒரு நீதி! ஆளும் கட்சிக்கு ஒரு நீதி! எதிர்கட்சிக்கு ஒரு நீதி என்று இன்றைய நீதிமன்றங்கள் தம் பணியைச் செம்மையாகச் செய்து வருகின்றன.
மாங்குடி மருதனார் தாம், இயற்றிய மதுரைக்காஞ்சியில், நீதி வழங்குவோர் வாழும் தெருவை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுச்செல்கிறார்.
“ அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையஞ் செய்யாது காத்து
ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்
                                 -மதுரைக்காஞ்சி – 489-492

வழக்குரைக்க வந்தவர்கள் மனதில் கொண்டிருந்த சந்தேகத்தால் எழுந்த அச்சத்தையும், வழக்குத் தோற்கும்நிலையில் அவர்களுக்கு ஏற்படும் வருத்தத்தையும், அவர்கள் நினைத்த பொருளின்மேல் கொண்டிருக்கும் பற்றுள்ளத்தையும், நீக்கி, ஒருவரிடம் பகையும், மற்றவரிடம் நட்பும் கொள்ளாமல் துலாக்கோல் போல் நடுநிலை உடையவராக அறக்கோட்பாடுடன் அறத்தைத் துணையாகக்கொண்டு வழக்குரைத்தோருக்கு விளக்கமாகக் கூறும் கல்வியில் சிறந்த சான்றோர்கள் வாழும் தெரு என்பது இப்பாடலடிகளின் விளக்கமாகும்.

4 கருத்துகள்:

  1. அற்புதமான இதுவரை அறியாத
    அனைவரும் அவசியம் அறிந்திருக்கவேண்டிய பாடல்
    எளிமையான அருமையான விளக்கத்துடன்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பகிர்வு மிக்க நன்றி முனைவரே பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  3. புதிய அரசுக்கு இப் பதிவு உரியதாக வேண்டும்!

    பதிலளிநீக்கு
  4. பாடலுக்கான சிறந்த பொழிப்புரையை வரவேற்கிறேன்

    visit: http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு