பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 4 மே, 2014

தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பலரும் அறிந்திருப்பார்கள். பல விழாக்களிலும் விழாக்களைத் தொடங்க மேற்கண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையோ, கடவுள் வாழ்த்துப் பாடல்களையோ பாடி விழாவைத் தொடங்குவர். 

லரும் அறியாத, சமயச் சார்பற்ற, தமிழின் பழமையையும், பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல் ஏதாவது சொல்லுங்களேன் என்று என்னிடம் கேட்போருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதுதான். இதனை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடல் கனிச்சாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.


தமிழ்த் தாய் வாழ்த்து

********************

அன்னை மொழியே

      அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
      முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
      கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
      மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே!

      திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே!

      எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
     மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
     முடிதாழ வாழ்த்துவமே!

சிந்தா மணிச்சுடரே!

       செங்கை செறிவளையே!

தந்த வடமொழிக்கும்

       தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
      சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
      மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில்

     சிரித்த இளங்கன்னீ !

சிந்துங் கலைவடிவே !

     சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
      நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
      வாழ்த்தி வணங்குவமே

                      
   - பாவலரேறு  பெருஞ்சித்திரனார்

11 கருத்துகள்:

  1. சிறப்பான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அருமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மிகவும் ரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  3. கனிச்சாறென இனிக்கும் கவிச்சாறு. தமிழின், தமிழ்மரபின் சிறப்புகளை இனிதே எடுத்தியம்பும் பாடல் வரிகளில் மனம் பறிகொடுத்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான பாடல். தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைவதற்கு முழுத் தகுதி உடைய பாடல்தான்

    பதிலளிநீக்கு
  5. பாடும்போது மகிழ்வாய் உள்ளது.
    பெருஞ்சித்திரனார் அய்யா அவர்களின் 72 வது நினைவுநாள் சென்றவாரம் நடந்த விழாவில் பங்கேற்றபோது இன்னும் நிறைய அறிந்துகொண்டேன்

    பதிலளிநீக்கு
  6. சிறந்த 'தமிழ்த் தாய் வாழ்த்து' பா அறிமுகம்.
    பாராட்டுக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு