பக்கங்கள்
▼
இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)
▼
சனி, 31 மே, 2014
புதன், 21 மே, 2014
சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் அவர்கள் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார்.கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது. சிலேடையாகப் பேசுவதில் வல்லவரான இவரது பேச்சில் நான் விரும்பிய சில நகைச்சுவைகள்....
செவ்வாய், 20 மே, 2014
ஒருபைசா தமிழனைத் தெரியுமா?
உலகமகா நகைச்சுவை ஒன்றைப் படித்தேன்...
“கணினியும், இணையமும் நாம் செலவிடும் நேரத்தைக் குறைத்துவிட்டன“ என்பது தான் அது.
இந்தக் கூற்று ஓரளவு உண்மைதான் என்றாலும், சமூகத்தளங்களில் பொழுதுபோக்குக்காக செலவிடும் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் மதிப்புமிக்க நேரத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரியும்.
முகநூல், டிவைட்டர், வாட்சாப், விசாட், லைன், கூகுள் + என இணையத்தின் ஆதிக்கத்தாலும் திறன்பேசிகளின் வரவாலும், நூல்களைக் கையில் எடுத்து வாசித்தல் என்ற வழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. நாளிதழ்கள் கூட இப்போதெல்லாம் இ-பேப்பர்களாக மாறிவிட்டன. இந்தக் காலத்தில் கடந்த காலத்தில் நம் முன்னோர் நடத்திய சிற்றிதழ்களைப் பற்றியும் அவற்றில் அவர்கள் சொன்ன சமூக சிந்தனைகளைப் பற்றியும் அறிந்துகொள்வதால் இன்றைய காலத்துக்கு ஏற்ப நாமும் சமூக சிந்தனைகளை இந்த ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்மாதிரியாக இருக்கும்.
இதழ்களை நடத்துதல் என்பது ஒரு தவம் போன்ற செயல் அது எல்லோராலும் இயலாதது. ஒரு பைசா தமிழன் என்ற இதழைப் பற்றியும் அதை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றியும் இன்று காண்போம்...
தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில் ஆதி தமிழர்கள், சாதியற்ற திராவிடர்களின் உரிமைகளைப் பற்றிப்பேசி வேத, பிராமணீயத்தை எதிர்த்து சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு. பிரதிநித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாக்கிய பண்டிதர் க அயோத்திதாசர் அவர்கள் தொடர்ந்து நடத்திய 'தமிழன்' வார இதழ் 104 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.
சென்னை இராயப்பேட்டையிலிருந்து புதன் கிழமைதோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்" என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. இந்த இதழ் வெளிவருவதற்கான தேவையையும் யாருக்கானது எனவும் பண்டிதர் அந்த இதழில் விளக்குகிறார்.
"உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவிக்கிறார்.”
இதழின் முகப்பில் 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழின் பெயரை புத்தக் குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெயது' என்றும் வலப்புறம் 'மங்கள்ம்' என்றும் எழுதியும் நடுவில் 'நன்மெய்க் கடைபிடி' என எழுதி, இருபுறமும் மலர் கொத்து என அழகுணர்வோடு மிக நேர்த்தியாக தன் இதழின் சின்னத்தை வடிவமைத்திருக்கிறார்.
முதல் இதழில், கடவுள் வாழ்த்து, அரசர் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பூய்வத்தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள்) சித்த மருத்துவ குறிப்புகள் என செய்திகளின் முக்கியத்துவம் கருதி வகைப்படுத்தி பிரசுரித்திருக்கிறார்.
ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும் மாறுதலடைந்து' (26.08.1908 - பக் 2) என விளக்கமளித்து 'ஒரு பைசாத்' நீக்கப் பெற்று 'தமிழன்' என்ற பெயரோடு 26.08.1908 முதல் வெளிவந்தது. தமிழனில் வெளி வந்த செய்திகளும் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பாக Ladies column தலைப்பில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம் பெற்றது. அடுத்து Genaral news பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள் அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்களும் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடகா கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர்.. போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் பரவியது.
மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் பற்றி, பிராமணீய மேலாதிக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். யதார்த்த பிராமண வேதாந்த விவரம் வேஷ பிராமண வேதாந்த விவரம், ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு, விபூதி ஆராய்ச்சி போன்ற நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு,சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்து விரிவாக எழுதினார்.
தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில், சமூக நீதி, சமூக மதிப்பிடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசினார். அதிகாரத்தில் பங்கு, பிரதிநிதித்துவ அரசியல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு, பகுத்தற்வு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணீய எதிர்ப்பு, தீணடாமை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல்கொள்கை தொகுப்பை வழங்கி தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி பெருமைபடுதியது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம்.
க. அயோத்திதாசப் பண்டிதர் (மே 20, 1845 - 1914; தமிழ்நாடு) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி , சமூக சேவகர், தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாகச் செயல்பட்டார். அவரது இயற்பெயர் காத்தவராயன்
அயோத்திதாசர் தமிழ்,
சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம்
வடமொழி மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார்.
அயோத்திதாசர்
1845 மே 20 இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்து,
பிறகு
நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார்.
அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை,
சடங்குவாதம்,
பிராமணீய ஆதிக்கம்,
ஆண்மீகக்கொள்கை,
மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு பகுத்தறிவுரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது.
அதன் அடிப்படையில் சுய சிந்தனை,
சுய கருத்தியல் தேடலாகவுமிருந்தது.
பெரியார் ஈ.
வெ. ராமசாமி தன்னுடைய பகுத்தறிவு, சுயமரியாதை கருத்துகளுக்கு அயோத்திதாசர் தான் முன்னோடி என்று பதிவு செய்திருக்கிறார்.
படைப்புகள்
க.
அயோத்திதாசப் பண்டிதர் நவீன இந்தியா கண்ட மாபெரும் அறிஞர்களுள் ஒருவர்.
தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர்.
தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர்.
அசோகருக்குப் பிறகு தமிழகத்தில் பௌத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்.
தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர்.
‘தமிழன்’ என்ற அடையாளம் தந்தவர்.
இவரது கருத்துகள்
‘தமிழன்’ இதழ் மூலமும்,
‘தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின்’
மூலமும் தமிழ்நாடு,
கோலார்,
மைசூர்,
ஐதராபாத்,
ரங்கோன்,
மலேசியா,
ஆஸ்திரேலியா,
தென்ஆப்ரிக்கா எனப் பல்வேறு இடங்களுக்குப் பரவி ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ந்தது.
அவரது அறிவு ஒளி,
இன்றும் சமூகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறது.
க.
அயோத்தி தாசர் நூல்கள்
1.
அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
2.
அம்பிகையம்மன் சரித்திரம்
3.
அரிச்சந்திரன் பொய்கள்
4.
ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
5.
இந்திரர் தேச சரித்திரம்
6.
இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம
7.
கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
8.
சாக்கிய முனிவரலாறு
9.
திருக்குறள் கடவுள் வாழ்த்து
10.
திருவள்ளுவர் வரலாறு
11.
நந்தன் சரித்திர தந்திரம்
12.
நூதன சாதிகளின் உள்வே பீடிகை
13.
புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
14.
புத்த மார்க்க வினா விடை
15.
பூர்வ தமிழ்மொழியாம் புத்தரது ஆதி வேதம்
16.
மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
17.
முருக கடவுள் வரலாறு
18.
மோசோயவர்களின் மார்க்கம்
19.
யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
20.
விபூதி ஆராய்ச்சி
21.
விவாஹ விளக்கம்
22.
வேஷ பிராமண வேதாந்த விவரம்
23.
பூர்வ தமிழ்மொழியாம் புத்தரது ஆதிவேதம்
24.
இந்திரர் தேச சரித்திரம்
25.
சாக்கிய முனிவரலாறு
26.
வேஷபிராமண வேதாந்த விவரம்
27.
யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
28.
மோசோயவர்களின் மார்க்கம்
29.
ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
30.
மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
31.
நூதன சாதிகளின் உற்சவ பீடிகை
32.
அம்பிகையம்மன் சரித்திரம்
33.
இந்திரர் தேச பெயத்தர்கள் பண்டிகை விவரம்
34.
விவாஹ விளக்கம்
35.
அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
36.
நந்தன் சரித்திர தந்திரம்
37.
முருக கடவுள் வரலாறு
38.
கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
39.
விபூதி ஆராய்ச்சி
40.
திருக்குறள் கடவுள் வாழ்த்து
41.
அரிச்சந்திரன் பொய்கள்
42.
திருவள்ளுவர் வரலாறு
43.
புத்தமார்க்க வினா விடை.
இவர் தொடங்கி நடத்திய இதழ்கள்
1.
திராவிடப்பாண்டியன்
(1885) (ரெவரென்ட் ஜான் ரத்தினம் அவர்களுடன் இணைந்து)
2.
ஒரு பைசாத் தமிழன்
(தமிழன் (1907 -1914) பண்டிதர் க.
அயோத்திதாசர் சுமார்
25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள்
2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை எழுதியவை தவிர அரசியல் கட்டுரைகள் கேள்வி பதில்கள் பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை அவர் எழுதினார்.
தான் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது
55 அதிகாரங்களுடன் நின்று விட்டது.
பண்டிதரின் மரணம் தான் அதற்குக் காரணம்.
ஒவ்வொரு தமிழர்களும் போற்றவேண்டிய அயோத்தி தாசர் அவர்களைப் பற்றி அவரது
பிறந்தநாளில் அவரது சிறப்புகளை பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழ் உறவுகளே உங்கள் குழந்தைகளுக்கும் இவரையும் இவரைப் போன்ற தமிழறிஞர்களையும் அறிமுகம்செய்யுங்கள்..