பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை பிறந்தநாள்

பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடகநூலைப் படைத்தவராவார்  (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) இவரது பெயரால் இன்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. 
இவர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.



பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.
வெளியிட்ட நூற்கள்
·         நூற்றொகை விளக்கம் (1888)
·         மனோன்மணீயம் (நாடக நூல், 1891)
·         திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore, 1894)


அன்று இதே நாளில் பிறந்த பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணியை எண்ணிப் பார்ப்பதில் பெருமிதம் கொள்வோம்

(தரவுகளுக்கு நன்றி - தமிழ்விக்கிப்பீடியா)

4 கருத்துகள்:

  1. தகவல்களுக்கு நன்றி! முழுமையான பாடல் அறியாத ஒன்று! அறிந்து கொண்டேன்!

    பதிலளிநீக்கு
  2. இனிய வணக்கம் முனைவரே..
    முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை
    அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

      நீக்கு