புதுமைப்பித்தன் என்ற புனைப் பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), அவர்களின் பிறந்தநாள் இன்று. மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்த
இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். எள்ளலுடன் கூடிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், மக்களிடம் பெரும் செல்வாக்குப்
பெற்றவையாகும்.
புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் சிறப்பிடத்தைப் பெற்றுத்தந்தன. அவர் எழுதியதாகக் கருதப்பபடும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணி ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார்.
இவர் எழுதிய சிறுகதைகள்
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
புதுமைப்பித்தன் அவர்களின் பொன்னகரம் என்ற கதையின் ஒலிக்கோப்பை இந்த இணைப்பில் கேட்கலாம்.
தரவுகளுக்கு நன்றி தமிழ்விக்கிப்பீடியா.
தரவுகளுக்கு நன்றி தமிழ்விக்கிப்பீடியா.
ஒலிக்கோப்பு இணைப்பிற்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குநல்ல பகிர்வு முனைவரே...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு. அவர் எழுதியதாகக் கருதப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்தில் வெளியிடப்பட்டன என்ற தகவல் வியப்பும் வருத்தமும் அளிக்கக்கூடியதாக உள்ளது.
பதிலளிநீக்குதமிழ்ச் சிறுகதை வரலாற்றின் சிகரத்தில் அவர் இருக்கிறார்! நல்ல பகிர்வுக்கு நன்றி அய்யா.
பதிலளிநீக்கு