பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 1 மே, 2014

பிறந்த ஊருக்குப் பெருமைசேர்த்தவர்கள்!

1. உ
. வே. சாமிநாதையர் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக .வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.  தமிழ் நாட்டில்  கும்பகோணத்துக்கு அருகே உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்

2. கண்ணதாசன் – சிறுகூடல்பட்டி. இவரின் இயற்பெயர் முத்தையா.   புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.சாகித்ய அகாதமி விருது பெற்றவர்., 

--------------------------------------------------------------------------------------------------
3. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் – திருத்தணியில் பிறந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.

--------------------------------------------------------------------------------------------------
4. ..சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை  ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்...சி. இவர் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------

5. சுப்பிரமணிய பாரதி  - எட்டயபுரம். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.

-------------------------------------------------------------------------------------------------------------------

6. பாரதிதாசன் -பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், மகாகவி பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர்என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------

7. பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈரோடு வேங்கடசாமி இராமசாமி பெரியார்  தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். தன் பகுத்தறிவுக் கருத்துக்களால் பகுத்தறிவுப் பகலவன் என அழைக்கப்பட்டார்.

-------------------------------------------------------------------------------------------------------------------
8. சீனிவாச இராமானுஜன் - ஈரோட்டில் பிறந்தவர் .இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ்ந்த உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 

-------------------------------------------------------------------------------------------------------------------
9. காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை  தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர்பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்

-------------------------------------------------------------------------------------------------------------------
10. காமராசர்  - (விருதுப்பட்டி) விருதுநகரில் பிறந்தார். தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார்.  இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கும், இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவர் பெயரால் மதுரையில் காமராசர் பல்கலைக்கழகம் உள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக