வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

பிறந்தநாள் பரிசு



வாழ்த்தும் மனங்கள்

எல்லையில்லா 
நுண்ணறிவால் 
வளர்ந்தவரே வணக்கம்!

ஏட்டு நூலோடு 
சுயசிந்தனையையும் வளரவிட்டு
உள்ளம் மகிழ்ந்தீர்

பலமொழிகளோடு
தமிழ்மொழியும் 
கற்கவேண்டியதுதான் 
என்பதை உணரவைத்தீர்….

காலம் காற்றடிக்கும் 
நேரத்தில் கடந்து
எல்லையற்ற அளவில் 
வளரப்போகிறது என்பதைப் புரியவைத்தீர்

ஒவ்வொரு பிறப்புக்கும்
அர்த்தமுண்டு
அதற்கும் 
சில கடமைகளுண்டு
என்பதை விளங்கவைத்தீர்

இரண்டடி குறளுக்கும்
இணையில்லாப் பொருளுண்டு
என்பதை 
நிகழ்கால விளக்கத்துடன் விளக்கினீர்...

இப்படி உங்களிடம் கற்கவேண்டியது
அதிகம்தான்
இருந்தபோதும் 
காலம்தான் எங்களைக் 
கடத்திச் செல்கிறதே

இருந்தாலென்ன?
உண்மை அன்பிற்கும் 
வாழ்த்தும் மனதிற்கும்தான்
வயது பொருட்டில்லையே… 

அதனால்தான் குழந்தை உள்ளத்துடன்
நேச நண்பரான உம்மை
கவிதையால் அர்ச்சித்து
வாழ்த்து தொழுகிறோம்
பல்லாண்டு வாழ்க..!!!!

இப்படிக்கு 
மாறாத நேசமுடன் உம் வணிகவியல் மாணவிகள்
கவிதை ஆக்கம் – இளம்கவிஞர் .பாரதி


தமிழறிஞர்கள் பிறந்தநாளை மட்டுமே நினைவு வைத்திருக்கும் நான் இன்று 

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தநாள் என்று அதற்கான 

தரவுகளைத்தேடிக்கொண்டிருந்தேன் இன்று எனது பிறந்தநாள் என்பதை 

எனக்கு நினைவுபடுத்திய எனதருமை மாணவச் செல்வங்களுக்கு 

மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

10 கருத்துகள்:

  1. பேராசிரியர் டாக்டர் இரா.குணசீலன் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவரே!
    நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியரும் வழிகாட்டியும் என்பது மாணவிகளின் கவிதையில் தெரிகிறது...வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரர்
    தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தமிழை நேசிக்கும் இனிய சகோதரர் எல்லாவற்றிலும் முதல் ஆளாய் முன்னேறி மிளிர எனது வாழ்த்துகளும் இறை வேண்டலும் எப்பவும் உண்டு. தங்களைப் போன்ற இளைஞரின் தமிழ்ப்பணியும், இணையப் பணியும் மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தொடருங்கள். நன்றி..

    பதிலளிநீக்கு
  4. மாணாக்கர் தங்கள் மேல் எத்தனை அன்பு வைத்திருக்கின்றனர் என்பதை இதோ இந்த வரிகளில் உணரமுடிகிறது குணசீலன்.. சந்தோஷமா இருக்குப்பா.. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் மறந்துக்கொண்டிருக்கின்றனர் என்று இனி சொல்லமுடியாது.. முயன்று எல்லோருக்கும் இனிமையான தமிழை நீங்கள் உற்சாகத்துடன் சுவாசமாக்கிக்கொண்டு இருக்கின்றீர்கள்...

    மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... இறைவன் உங்களுக்கு ஆயுள் , ஆரோக்கியம், சந்தோஷம் என்றென்றும் கொடுத்து பல்லாண்டு காலம் இறைவன் அருளால் நலமுடன் வாழ அன்பு வாழ்த்துகள்பா.. த.ம. 2

    பதிலளிநீக்கு
  5. மாணவரின் கவிதை அருமை! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. ஒரு ஆசிரியரை நேசநண்பராய் ஏற்கச்செய்த குருவின் அன்பினைப் பாராட்டுவதா? குருவுக்கு ஏற்ற மாணாக்கர் நாங்கள் என்பதை அழகிய தமிழால் உணர்த்திய மாணவர்களின் அன்பினைப் பாராட்டுவதா? ஒவ்வொரு ஆசிரியரும் இப்படி மாணவர்களுடனான தங்கள் உறவினை நேசமுகத்துடன் பலப்படுத்தினால் கல்வியில் நாட்டமில்லாத கண்மணிகளும் கற்றுத் தேர்ந்து வாழ்க்கையில் உயர்வார்கள்! வாழ்க்கைக் கல்வியில் தேர்வார்கள்! பெருமிதமிக்கப் பதிவு. மாணவிகளுக்குப் பாராட்டுகள். தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவரே...

    பதிலளிநீக்கு
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் முனைவரே. வாழ்க பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
  9. எம் இனிய அண்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து

    பதிலளிநீக்கு