வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

தமிழர் பரம்பரை


அம்மா மம்மியாகவும், அப்பா டாடியாகவும் மாறிவிட்டதால் இன்று பல குழந்தைகளுக்கான பெயர்களும் தமிழ் அடையாளங்களை இழந்துவிட்டன. பல குழந்தைகளுக்குத் தன் பெயர் என்னமொழியில் உள்ளது? அதற்கான பொருள் என்ன? என்பது கூட தெரிவதில்லை.

தந்தையின் பெயரை மகனுக்கும், தாயின் பெயரை மகளுக்கும் இடுவது தொன்மையான தமிழ் மரபாகும். இதனாலேயே பெயரன், பெயர்த்தி என்னும் உறவுச் சொற்கள் வழக்கமாயின. இதனை எடுத்தியம்பும் ஐங்குறுநூற்றுப் பாடலைக் காண்போம்.
(தலைவனின் வீடுசென்று திரும்பிய செவிலித்தாயின் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.)

புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெரும் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்நகை பயிற்றி
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே
                      -ஐங்குறுநூறு -403
பலராலும் அறியப்பட்ட பெருஞ்சிறப்பினை உடைய தன் தந்தையின் பெயர் தாங்கிய தன் மகன், இனிய புன்முறுவலுடன் சிறுதேர் உருட்டித் தளர்நடை பயிலுதலைக் கண்டு, தலைமகனுக்குத் தன் காதலியின்பால் இருந்த அன்பைப் போல் மகன் மீது கொண்ட அன்பும் பெரியது என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.

இந்தப் பாடலின் வழியாக,

தந்தையின் பெயரை மகனுக்கு இடும் தமிழர் மரபு உணர்த்தப்படுகிறது.        

ஆண்குழந்தைகள் சிறுதேர் உருட்டி விளையாடும் வழக்கம் சுட்டப்பட்டது.

தன் தலைவி மீது தலைவன் கொண்ட அன்பைப் போல தன் மகன் மீதும் கொண்ட அன்பும் பெரியது என்பது உணர்த்தப்படுகிறது.

குழந்தைகளின் அழகிய சிரிப்பும், தத்தி தத்தி நடக்கும் அழகும் தளர்நடையாகக் கண்முன் நிறுத்தப்படுகிறது.

இதுதான் தமிழர் பரம்பரை


6 கருத்துகள்:

  1. இன்றைய காலத்தில் பாட்டன் பெயர் கூட பலருக்கும் தெரியவில்லை ..பூட்டன் என்பதையே மறந்தாச்சு !

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான ஐங்குறுநூறு பாடல்...

    விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
  3. இனிய பதிவு-நாளைய தலைமுறை அறிய வேண்டிய உண்மை.
    http://tamilsites.doomby.com/

    பதிலளிநீக்கு
  4. தமிழ் மரபும் விளக்கமும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. ஐயா! தங்கள் பதிவை எனது http://yarlpavanan.wordpress.com/ தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. தமிழின் சிறப்பான உண்மைகளை வெளிக்கொணர்தல் அருமை..!!

    பதிலளிநீக்கு