வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 7 மார்ச், 2014

பேராசிரியரின் உலக சாதனை

உத்ரகண்ட் மாநிலத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் அரவிந்த் அவர்கள் இடைவிடாமல்  130 மணிநேரம் இயந்திரப் பொறியியல் பாடம் நடத்தி உலக சாதனை படைத்தார் என்ற செய்தி என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.




உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறு பேரில் ஒருவருக்குத்தான்  கிடைக்கும்!
ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வர்!
ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பார் ஔவையார். இதனை,


“ஆர்த்தசபை நூற்றொருவர் 
ஆயிரத்து ஒன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்

                                                                                                                                          - ஔவையார்.




இந்தப் பாடல் வழியாக சபையில் இருக்கும் தகுதி, கவிதை எழுதும் ஆற்றல், பேச்சாற்றல் ஆகியன சிறப்பித்து உரைக்கப்படுகின்றன. 


6 கருத்துகள்:

  1. பேராசிரியர் அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு....
    அந்தப் பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் இமாலயச் சாதனையே
    அதுவும் பாடம் நடத்துவன் மூலம்.......
    ஔவையின் அருமையான அற்புத வரிகளுடன்
    ஒரு அற்புதமான சாதனையை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பேராசிரியர் அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....உங்களுக்கும் பகிர்ந்துக்கொண்டமைக்கு ஐயா.

    பதிலளிநீக்கு
  5. பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. பேராசிரியர் அரவிந்த் மிஷ்ரா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு