தமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத்
தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும்
விரும்புகின்றனர். சிலர் திருமணம் உள்ளிட்ட வாழ்த்து அட்டைகள் தமிழில்
இருக்கின்றதா என்றும் தேடுகின்றனர். சில நண்பர்கள் என்னிடம் தொடர்புகொண்டு தம்
புதுவீட்டுக்கு அழகியதமிழில் பெயர் வேண்டும் எனக்கேட்டனர். பலருக்கும் பயன்படுமே
என்று இங்கு பதிவுசெய்கிறேன்.
அன்பகம்
அணியகம்
அறிவகம்
இசையகம்
இன்னிசையகம்
எழிலகம்
கலையகம்
கயல்
பூந்தளிர்
பூம்புனல்
பொய்கை
யாழ்மொழி
குழலிசை
குறளகம்
குறிஞ்சி
பொழிலகம்
முகிலகம்
முல்லை
மலரகம்
மருதம்
நெய்தல்
தமிழோசை
தளிரகம்
தமிழ்த்தென்றல்
தமிழோசை
தமிழ்மனை
தென்றல்
பொதிகை
மறைமலையகம்
முத்தமிழ்இல்லம்
பூம்பொழில்
தொல்காப்பியர்
குடில்
ஔவை
இல்லம்
சாரலகம்
தாமரை
இல்லம்
அகம், அடுக்ககம், இல்லம், குடில், நிலையம், மனை,
மாளிகை, முன்றில், வீடு எனப் தங்கள்பெயர்த் தேர்வுக்கு ஏற்றவாறு மேற்கண்ட சொற்களை
சேர்த்துக்கொள்ளலாம். அன்பு நண்பர்களே தாங்களும் தங்களுக்குப் பிடித்த
தமிழ்ப்பெயர்கள் இருந்தால் மறுமொழியில் குறிப்பிடலாமே..
ஆகா...! அருமையான தொகுப்பு ஐயா... நன்றி...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
நீக்குபண்பகம், அன்பு இல்லம், மகிழ்மனை, பாசமாளிகை, இன்பகம், இனிய இல்லம்....
பதிலளிநீக்குவீட்டுக்கான அருமையான பெயர்களைக் குறிப்பிட்டீர்கள் கிரேஸ்.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமையான தகவல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ரூபன்.
நீக்குவைகறை இல்லம், தந்தை திருவிடம், தாய் திருவிடம், முல்லை வாயில், அன்புரு இல்லம், யாழிசை இல்லம் - நன்றி.
பதிலளிநீக்குஅழகான பெயர்களைக் குறிப்பிட்டீர்கள் சுமதி. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்
நீக்குஅழகான வீடுகளுக்கு நீங்கள் கொடுத்தள்ள எந்த
பதிலளிநீக்குதமிழ்ப்பெயரைச் சுட்டினாலும் இன்னும் அழகாக மாறிவிடும்.
நல்ல பதிவு. நன்றி முனைவர் ஐயா.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்
நீக்குஇனிய வணக்கம் முனைவரே...
பதிலளிநீக்குஅருமையான தமிழ்ப் பெயர்கள்..
வாசிக்கும் போதே சொற்கள் தேன்சுவையைக் கொடுக்கின்றன.
==
என் இல்லத்தின் பெயர் ""பன்னீர் சோலை""
தங்கள் இல்லத்துக்குப் பொருத்தமான பெயர் நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் .
நீக்குஅருமை
நீக்குபயனுள்ள பதிவு
பதிலளிநீக்குஇது அதிகம் தெரியாததால்தான்
அதிகம் பேர் நிவாஸ் என
சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குநன்றி ஐயா,
பதிலளிநீக்குஅனைவரும் தம்முடைய இல்லத்தை இவ்வாறு தமிழில் பெயர் சூட்ட இவைகள் மிகவும் உதவியாக இருக்கும். எனது இல்லத்தின் பெயர் “ சந்தன இல்லம் “.
சந்தன இல்லம் மிக நல்ல தேர்வு.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்
நீக்குஇல்லம் என்பதை ஆங்கிலத்தில் ILL (am) என எழுதும்போது அதில் முதல் மூன்றெழுத்துகளை தமிழில் வார்த்தால் நோய்வாய்ப்படு என வரும். நம்மில் சிலர் வீட்டின் பெயர்களை ஆங்கிலத்தில் அப்படியே செதுக்குகின்றனர். அதில் Avvai ILLam என எழுதியிருந்ததை நானும் பார்த்தேன். வீட்டின் உள்ளே நுழைவதற்கு முன்னரே அதன் பெயர் வெளியில் தெரிகிறது. அது நம்மை நோய்வாய்ப்படு என சாபம் கொடுத்துக்கொண்டே இருந்தால் நன்றாகவா இருக்கும்.
பதிலளிநீக்குதாங்கள் சொல்வது சிந்திக்கவேண்டிய உண்மை நண்பரே. அதனால் தமிழில் இல்லம் என்றே இடலாம். மாறாக மனை, குடில், அகம் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். தமிழில் எழுதுவது என்று முடிவுசெய்த பிறகு அதை ஆங்கிலத்தில் சிலர் எழுதுவது வருத்தத்துக்குரிய உண்மை. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.
நீக்குஇல்லம் என்பதை ஆங்கிலத்தில் எழுத வேண்டிய தேவை இல்லையே. தமிழை ஆங்கிலத்தில் அப்படியே எழதி (மொழிப்பெயற்காமல்), அதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்தல் எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. எல்லாம் நம் மனதை பொறுத்தது.
நீக்குநல்ல தொகுப்பு நிச்சயம் பயன்படும்
பதிலளிநீக்குwww.tngovernmentjobs.in
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்
நீக்குவீடுகளுக்கு தமிழ் பெயரிடல் மிகவும் நல்லதே. அழகாகவும், அருமையாகவும் கூட அமையும். அன்பு இல்லம் என்பது எனக்குப் பிடித்த வீட்டுப் பெயர்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நீலவண்ணன்.
நீக்குநாவுக்கினிய நற்றமிழ்ப் பெயர்கள். இப்படியொரு பெயர் வைப்பதற்காகவேனும் ஒரு இல்லம் தேவைப்படுகிறது எனக்கு. சிறப்பான பகிர்வுக்கு நன்றி முனைவரே.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் கீதமஞ்சரி
நீக்குஅழகான தமிழ் பெயர்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் சுரேஸ்
நீக்கு'ஆனந்தம்' - எங்க வீட்டுப் பெயர்.
பதிலளிநீக்குநல்லதொரு பெயர். தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.
நீக்குநல்லதொரு பெயர் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்குஇனிமையான பெயர்கள். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழானவன்.
நீக்குஅருமையான அதே சமயம் வித்தியாசமான அவசியமான பதிவுகள் !!!
பதிலளிநீக்கு--
அழகிய தொகுப்பு..இப்பெயருக்காகவாவது ஒரு வீடு கட்டலாம்.
பதிலளிநீக்குஎங்கள் குலதெய்வம் முருகன்,என் தந்தையார் எங்கள் வீட்டுக்கு "முருகனகம்" "எனப் பெயரிட்டார். அக்கா , அத்தானின் பெயரில் இருந்த திருவுடன் சேர்த்து "திருவகம்" எனப் பெயரிட்டார். எங்கள் ஈழத்தில் வாசம்" எனும் விகுதி சேர்த்து பெயர்கள் வைப்பார்கள், "உமா வாசம் என நண்பன் வீடு. அவன் தாயார் பெயர் உமாமகேஸ்வரி.
பவனம்,விலாஸ் எனும் விகுதியுடனும் அதிகம் பெயர் வைப்பர்கள். அப்போ இந்த தூய தமிழ் எனும்
சிந்தனையே இருக்கவில்லை.
வடமொழி; ஆங்கிலக் கலப்பை நாகரீகமெனக் கருதினார்கள்.யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவிலருகில் ஒரு வக்கீலின் வீட்டுப் பெயர் "கந்தன் கருணை"- ஆம் சிவாஜியின் படத்தின் பின் கட்டிய வீடு. அழகான பெரிய முன்றில் பூந்தோட்டத்துடன் கூடிய திரும்பிப் பார்க்கவைக்கும் மாடி வீடு.
அருமையான தொகுப்பு ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஐயா எனது புது வீட்டுக்கு கலை குடில் என்று பெயர் வைக்கலாமா.
பதிலளிநீக்குஎன் வீட்டின் பெயர் முத்தமிழகம்
பதிலளிநீக்குநல்ல விளக்கம் எனக்கும் ஒரு பெயர் வைக்க வேண்டும் என்னுடைய புதிய இல்லத்திற்கு..
பதிலளிநீக்குஐயா புது வீட்டுக்கு வள்ளியம்மை அகம் என்று பெயர் வைக்கலாமா
பதிலளிநீக்குஓ வைக்கலாம் ஐயா
நீக்குகுடில் என்றால் என்ன? முழு விளக்கம் தர முடியுமா? ஐயா
பதிலளிநீக்குகுடிசை
நீக்குசிற்றில்
நாட்டுப்புற மனை
hut
small house
ஐயா, எங்கள் வணிக கட்டிடத்திற்கு நல்ல தமிழ் பெயர் தேடுகிறோம். தயவுசெய்து சில நல்ல பெயர்களை பரிந்துரைக்க முடியுமா?
பதிலளிநீக்குகனககம் என்று வைக்கலாமா. எனது தந்தையின் பெயர் கனகு.
பதிலளிநீக்குகனகம் என்றால் தங்கம்.. கனககம் என்று இதுவரை சொல் இல்லை நண்பரே.. தங்கள் தந்தை அகத்தே இருப்பதாக எண்ணி கனககம் என்று வைக்கலாம்..
நீக்குஅருமை
பதிலளிநீக்குஐயா! எங்கள் புதிய வீட்டிற்கு " " சரஸ்வதி சாரலகம்" என்று பெயர் வைக்க உள்ளோம். இதன் முழுப் பொருள் விளக்கம் தாருங்கள்! நன்றி வணக்கம்!
பதிலளிநீக்குசரஸ்வதி என்பது கடவுட் பெயர், சாரல் என்பது மலைச்சாரலைக் குறிக்கும். கடவுள் அருளகம் என்பது பொருள் நண்பரே
நீக்குஇன்றைய காலத்திற்கு ஏற்ற தூய தமிழ் பெயர்கள். அருமை. அய்யா. உங்களின் பணி அளப்பரியது
பதிலளிநீக்குநன்றி
நீக்கு