அ. மாதவையா (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.
அ. மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்து, பின்னர் அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார்.
அக்காலத்தில் இருந்த அவர் குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) மாதவையாவுக்கு திருமணம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக தற்போது ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்குமொழியினையும் கற்றறிந்தார்.
மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். அன்று, தன் ஐம்பத்தி மூன்றாம் வயதில், மாரடைப்பால் காலமானார்.
நாவல்
· பத்மாவதி சரித்திரம் (1898)
· முத்துமீனாட்சி (1903)
· விஜயமார்த்தாண்டம் (1903)
· Thillai Govindan (1903)
· Satyananda (1909)
· The story of
Ramanyana (1914)
· Clarinda (1915)
· Lieutenant Panju (1915)
· Markandeya (1922)
· Nanda (1923)
· Manimekalai (1923)
சிறுகதை
· குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924)
நாடகம்
· திருமலை சேதுபதி (1910)
· மணிமேகலை துறவு (1918)
· ராஜமார்த்தாண்டம் (1919)
· பேரிஸ்டர் பஞ்சநாதன் (1924)
கவிதை
· Poems (20 கவிதைகள்) (1903)
· Dox vs Dox poems (1903)
· பொது தர்ம சங்கீத மஞ்சரி (1914)
· The Ballad of
the penniless bride (1915)
· புதுமாதிரி கல்யாணப் பாட்டு (1923)
· இந்திய தேசிய கீதங்கள் (1925)
கட்டுரை
· Thillai
Govindan's Miscellany (1907)
· ஆசார சீர்திருத்தம் (1916)
· சித்தார்த்தன் (1918)
· பால வினோத கதைகள் (1923)
· பால ராமாயணம் (1924)
· குறள் நானூறு (1924)
· Dalavai Mudaliar
(1924)
· தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924)
· தக்ஷிண சரித்திர வீரர்கள் (1925)
இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன.
அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.
(தரவுகளுக்கு நன்றி - தமிழ்விக்கிப்பீடியா)
மறக்காமல் பதிவு செய்கிறீர்கள்... சிறப்புகளுக்கு மிக்க நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.
நீக்குமாதவையா பற்றி அறிந்துகொண்டேன், நன்றி முனைவரே! அவருடைய நூல்களை படிக்க ஆவல் எழுந்துள்ளது, கண்டிப்பாக படிக்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்.
நீக்குமுனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வணக்கம்.அருமையான தகவல்களைத் தொகுத்து, உரிய நாள்களில் வெளியிடுவது பெரும் பணி அதைச் சிறப்பாகச் செய்துவருவது பாராட்டுக்குரியது. தொடர்ந்து செய்வது இன்னும் போற்றுதலுக்குரியது. வளர்க தங்கள் பணி.
பதிலளிநீக்குஅ.மாதவையா பற்றி மேலும் ஒரு முக்கியமான தகவல்- 1910-12ஆண்டுகளில் தூத்துக்குடித் தமிழன்பர்கள் நடத்திய கவிதைப்போட்டியில் -நண்பர்களின் வற்புறுத்தலுக்காக- கலந்துகொண்டு பாரதியார் எழுதிய கவிதைக்கு இரண்டாம் பரிசும் அ.மாதவய்யா எழுதிய கவிதைக்கு முதல்பரிசும் தரப்பட்டதாகத் தமிழ்ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். அந்தப் பாடல் எது என்று தெரியவில்லை. தெரிந்தால் அதுபற்றி எழுத வேண்டுகிறேன். நன்றி வணக்கம்.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே. மாதவையா முதல்பரிசு பெற்றார் என்பதை மட்டும் நான் அறிவேன். அந்தப் பாடல் என்ன என்று எனக்கும் தெரியாது. இணையத்தில் தேடிப்பார்த்தவரை அப்படி எதுவும் கிடைக்கவில்லை. இனிவரும்காலங்களில் அதைத்தேடி பதிவுசெய்ய முயற்சிக்கிறேன் நண்பரே.
நீக்குநன்றி.
மகாகவியை இரண்டாம் இடத்திற்கு தள்ளியவர்..
பதிலளிநீக்குகேட்கவே பிரமிப்பாக இருக்கிறது முனைவரே...சிறந்த தமிழ் ஆர்வலர், படைப்பாளி பற்றிய பகிர்வுக்கு நன்றிகள் பல முனைவரே.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.
நீக்கு