இன்று ஆசிரியர் தினம். வழக்கமாக இந்தநாளில் நான் ஆசிரியர் குறித்த சிறப்புப் பதிவு இடுவதுண்டு. ஆனால் இன்று அப்படி எதுவும் இடவில்லை. இன்று மாணவர்களுக்கு முன்மாதிரியாக ஏதாவது செய்யலாம் என்ற எண்ணத்தில் எங்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தேன். நான் இரத்ததானம் செய்வதைப் பார்த்து, பல மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். எடைகுறைவான மாணவர்களும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்ய முன்வந்தனர். சிலர் என் நண்பர் இரத்தம் கொடுக்கிறார் நானும் கொடுக்கவேண்டும் என அடம்பிடித்தனர். அவர்களிடம் உங்க பெற்றோரிடம் இதற்கு அனுமதி வாங்கினீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எங்கள் பெற்றோர் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டார்கள் என்று சொன்னார்கள். இருந்தாலும் இரத்ததானம் செய்பவருக்கு குறைந்தது, 45கிலோவாவது எடை இருக்கவேண்டும் என அறிவுறுத்தி எடைகுறைவான மாணவர்களை, நீங்கள் வரும் நாட்களில் தானம் செய்யுங்கள் என ஆற்றுப்படுத்தி்னேன். பிறகு அவர்கள் அடுத்து இந்த முகாம் நடக்கும்போது தவறாது என்னை அழையுங்கள் என ஆர்வத்துடன் சொல்லிச்சென்றனர்.
பெற்றோரிடமும், இளம் தலைமுறையினரிடமும் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வரவேற்புக்குரியது பாராட்டுதலுக்குரியது.
ஒரு ஆசிரியர் வகுப்பில் கூறும் அறிவுரைகளைவிடவும் அவரது செயல்பாடுகள் மாணவர்களைப் பெரிதும் சிந்திக்கவைக்கும் என்பதை இன்றைய நாள் எனக்கு உணர்த்தியது.
பலர் தம் திருமண நாளிலோ, பிறந்தநாளிலோ இரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஆசிரியர்களான நாம் இதுபோன்ற சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளை மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடலாமே..
பலர் தம் திருமண நாளிலோ, பிறந்தநாளிலோ இரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஆசிரியர்களான நாம் இதுபோன்ற சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளை மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடலாமே..
அருமை அருமை முனைவரே...
பதிலளிநீக்குஒரு ஆசிரியர் வகுப்பில் கூறும் அறிவுரைகளைவிடவும் அவரது செயல்பாடுகள் மாணவர்களைப் பெரிதும் சிந்திக்கவைக்கும் என்பதை சிறப்பாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!
nallathunga ayyaa!
பதிலளிநீக்குமிகவும் அருமை முனைவரே! ஆசிரியர் தின வாழ்த்துகள்!
பதிலளிநீக்குசிறந்த விழிப்புணர்வுச் செயற்பாட்டைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு