வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

நன்றி சொல்லும் முறை

பேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும்.
தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர், ஒலிஒளி அமைப்பு நல்கியோர், நிழற்படக் கலைஞர் என யாரையும் விட்டுவிடாமல் எல்லோருக்கும் நன்றி சொல்லவேண்டும். சுருக்கமாக அதேநேரம் கடனுக்குச் சொல்லாமல் அனைவரும் ஏற்குமாறு நன்றி சொல்லவேண்டும். அவையோர் உணவுக்காகவோ, தன் வீட்டுக்குச் செல்லவோ ஆவலோடு இருக்கும்போது, நீட்டி முழக்கி நன்றி உரை சொல்லிக்கொண்டிருந்தால் அவையோர் நன்றிசொல்பவரைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவர். அதனால் மிகவும் சுருக்கமாக குறைந்தது இரண்டு நிமிடங்களிலும் அதிகமானால் ஐந்து நிமிடங்களிலும் நன்றி சொல்வது நலமுடையதாகும்.

கவித்துவமாக நன்றி நவில்தல்
தத்துவமாக நன்றி சொல்லுதல்
நகைச்சுவையாக நன்றி சொல்லுதல்
புள்ளிவிவரங்களுடன் நன்றி சொல்லுதல்
இயல்பாக நன்றி சொல்லுதல்

என நன்றி நவில்தல் அவரவர் திறனுக்கேற்ப வேறுபடும்.

நன்றி நன்றி நன்றி என ஒரே நன்றியைத் திரும்பத் திரும்பச் சொல்வதைவிட அந்த நன்றியை கொஞ்சம் மாற்றி,

நனி நன்றி
உளமார்ந்த நன்றி
மனம் நிறைந்த நன்றி
நெஞ்சார்ந்த நன்றி
நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நன்றி மறவேன்
நன்றியை நினைத்துப் பார்க்கிறேன்
நன்றிகளை எண்ணிப் பார்க்கிறேன்
செவிகளும், மனமும் நிறைந்திருக்கிறது
நேரம் பயனுள்ளதாக இருந்தது

எனக் கூட்டத்தின் தன்மைக்கேற்ப நன்றியுரை சொல்லும்போது பேச்சின் தொடர்புடைய திருக்குறளையோ, பொன்மொழியோ, சான்றோர் கருத்துக்களையோ, சிறுகதைகளையோ மிகவும் சுருக்கமாக, நயமாகச் சொல்லிப் பாராட்டி, நன்றிகளை உதடுகளால் மொழியாமல், உள்ளத்தால் உச்சரித்தால், பார்வையாளர்கள் சில மணித்துளிகளைப் பெரிதாக நினைக்காமல் காத்திருப்பார்கள் என்பது நன்றி நவில்வோர் கருத்தில் கொள்ளவேண்டிய சிந்தனையாகும்.

நன்றி நவில்தலை இதற்கு மேல் எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பொன்னான நேரத்தைக் கருத்தில் கொண்டு வந்து வாசித்தமைக்கு முத்தான நன்றிகளைத் தங்களுக்கு உரித்தாக்கிக்கொள்கிறேன்.


25 கருத்துகள்:

  1. நன்றியுரை வரிகள் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி எப்படி சொல்வது என்று விளக்கமாக சொன்னதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் உஷா அன்பரசு.

      நீக்கு
  4. நன்றி சொல்லும் விதத்தை நன்றாய் சொன்ன உங்களுக்கு நன்றி பல உரித்தாகுக!

    பதிலளிநீக்கு
  5. நன்றி எப்படிச் சொல்வது என்பதை விளக்கியமைக்கு நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  6. நன்றியுரை என்று அறிவிக்கும்போதே கூட்டம் கலைய ஆரம்பிப்பது அநாகரிகமான செயல் என்றாலும் அக்கூட்டத்தை இழுத்து நிறுத்தும் வகையில் சிறப்பான முறையில் சுருக்கமாகவும் சுவைபடவும் நன்றி நவிலல் என்னும் கலையைக் கற்று அதன்படி செயலாற்றுவது அறிவுடைமை. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அவசியமான விடயங்கள். மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள விடயங்களை தந்தமைக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  9. அருமையாக நன்றி சொல்லும்
    சூட்சுமம் அறிந்தேன்
    மிக்க நனறி

    பதிலளிநீக்கு
  10. நன்றி என்ற மூன்று எழுத்தை அழகாக புரிய வைத்தீர்கள் ஐயா.தங்களின் இப்பதிவு எனக்கு மனநிறைவாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றிகள் பல ஐயா.

    பதிலளிநீக்கு
  11. மிக்க மகிழ்ச்சி !!!!

    வாழ்க வையகம் !!! வாழ்க வளமுடன் !!!

    பதிலளிநீக்கு
  12. நன்றி நவில்வதை நயனுறச் சொன்னமைக்கு நன்றி.நன்றி சரியா?நன்றிகள் சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி என்ற சொல்லே போதுமானது. சில நேரங்களில் பலருக்கும் தெரிவிக்கிறோம் அதனால் பன்மையில் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நன்றிகள் என்று தெரிவிக்கிறோம் நண்பரே..

      நீக்கு