பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 28 செப்டம்பர், 2013

காலத்தின் முடிவு

ர.பாரதி
மூன்றாமாண்டு வணிகவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

எத்தனை வேதனைகள்
என்னைப் பெற்றெடுக்கும்போது பெற்றிருப்பாள்…
எத்தனை பொய்கள்
என்னைச் சாப்பிட வைக்க சொல்லியிருப்பாள்…
எத்தனை தாலாட்டுகள்
என்னைத் தூங்கவைக்கப் பாடியிருப்பாள்…
எத்தனை துயரங்கள்
என் படிப்பிற்காக அனுபவித்திருப்பாள்…
எத்தனை சாபங்கள்
என்னை ஏசியியோருக்கு விட்டிருப்பாள்…
எத்தனை போரட்டங்கள்…
என்னை நன்றாக வளர்க்கக் கடந்திருப்பாள்…
எத்தனை அறிவுரைகள்
என்னை நல்வழிப்படுத்த சொல்லியிருப்பாள்…
எத்தனை வேண்டுதல்கள்
என்னை மகிழ்ச்சிக்காக் கடவுளிடம் வேண்டியிருப்பாள்..

இத்தனையும் எனக்காகப் பட்டவள்
இத்தனையும் எனக்காகச் சொன்னவள்
இத்தனையும் எனக்காகக் கேட்டவள்

இன்றோ….

ஆதரவற்று முதியோர் இல்லத்தில்
நிம்மதியின்றி இருக்கிறாள்..

இதுதான் காலத்தின் முடிவாயின்
நாளை என் பாசப்பிள்ளையால்
என் நிலையும் இதுதானோ..??


10 கருத்துகள்:

  1. தன்னை வளர்த்து விட்ட பெரியவர்களை கடைசி காலத்தில் கவனித்துக்கொள்ளாமல்

    ஆதரவின்றி விட்டு விடும் என்ற மனிதனும் உண்மையான மனிதனில்லை...

    வயது முதிர்ந்தபிறகு அவர்கள் குழந்தையாகி விடுகிறார்கள் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு மகனின் கடமை....

    இல்லையென்றால் நமக்கும் வயதாகும்.. நமக்கு இதை நிலைதான் வரும்...?

    பதிலளிநீக்கு
  2. மாணவி. கவிதாயினி பாரதிக்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள் முனைவரே....
    படத்தில் இருக்கும் கவிதையும் அருமை,

    பதிலளிநீக்கு
  3. எழுதிய பாரதிக்கும் ,ஊக்குவித்த உங்களுக்கும் பாராட்டுக்கள் ..
    த.ம 9

    பதிலளிநீக்கு
  4. Best poem....
    We must learn to respect our parents.
    Convey my greetings to her.

    www.thamizhmozhi.net

    பதிலளிநீக்கு
  5. அருமையான உணர்வுப்பூர்வமான கவிதை படைத்த மாணவி பாரதிக்கு வாழ்த்துகளும் பாராட்டும்! படங்களிலுள்ள கவிதைகளும் நெகிழ வைக்கின்றன.
    சௌந்தர் அவர்களின் கருத்து உண்மைதான் ஆனால் எனக்குத் தோன்றிய ஒன்று ..//அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு மகனின் கடமை..../// மகனின் கடமை மட்டுமல்ல மகளுக்கும்தான்! பெற்றோரை அனைவரும் பேண வேண்டும்!

    பதிலளிநீக்கு
  6. இரண்டுமே நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்.ஏதேனுமாய் ஒரு இதழுக்கு எழுதி அனுப்பச்சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  7. ர.பாரதியின் கவிதையின் கருத்து அருமையானது. சிந்திக்க வைப்பது. வாழ்த்துக்கள். – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    பதிலளிநீக்கு
  8. ர.பாரதியின் கவிதை நெகிழ வைக்கின்றன

    பதிலளிநீக்கு