பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 21 ஆகஸ்ட், 2013

இன்று ப.ஜீவானந்தம் பிறந்தநாள்.

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 211907 - ஜனவரி 181963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப்பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத்தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம்சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஜீவாவின் நூல்கள்

  • மதமும் மனித வாழ்வும்
  • சோஷலிஸ்ட் தத்துவங்கள்
  • புதுமைப்பெண்
  • இலக்கியச்சுவை
  • சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
  • மொழியைப்பற்றி
  • ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
  • மேடையில் ஜீவா (தொகுப்பு)
  • சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
  • கலை இலக்கியத்தின் புதிய பார்வை
  • தேசத்தின் சொத்து (தொகுப்பு)
ஆகியன இவரது சிறந்த படைப்புகளாகும்.

ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி வருகைபுரிந்தார்.   ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?'' என்றார். அதற்கு, "இந்தத் தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார். ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார். பிறகு காந்திஜி, "இல்லையில்லை, நீங்கள்தான்  இந்த தேசத்தின் சொத்து'' என்றார். இவ்வளவு தன்னலம் கருதாத பொதுநலத்துக்காக தன் வாழ்வைச் செலவழித்த ப.ஜீவானந்தம் அவரகளின் பணிகளை எண்ணிப்பார்ப்பது நம் கடமையாகும்.

(தரவுகளுக்கு தமிழ்விக்கிப்பீடியாவுக்கு நன்றி)

3 கருத்துகள்:

  1. முழுமையான தகவல்களுடன் சிறப்பான பகிர்வு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. மாமனிதர் ஜீவா குறித்து கல்லூரியில் படிக்கும் போது என் ஆசான் அவர்களால் அதிகம் தெரிந்து கொண்டேன்.

    நல்ல பகிர்வு முனைவரே....

    பதிலளிநீக்கு
  3. தமிழக பொதுவுடமையின் பிறந்தநாள்...

    பதிலளிநீக்கு