தமிழகத்தில் வழக்கில் இருக்கும் குழப்பமான
மொழிக்கொள்கை காரணமாக, இன்றைய மாணவர்கள் தாய்மொழியான தமிழறிவும் முழுமையாக
இல்லாமல் பிறமொழியிலும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள்.
நேற்று நான் பேருந்துக்காகக் காத்திருந்தேன். என்
அருகே எங்க பக்கத்துவீட்டுப் பையனும் பேருந்துக்காகக் காத்திருந்தான். அவன்
தனியார் ஆங்கிலவழிப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்துவருகிறான். நான்
செல்லவேண்டிய பேருந்து வந்தவுடன் அதில் செல்லவேண்டும் என அவனிடம் விடைபெற்றேன்.
அவனோ, அண்ணா நான் செல்லவேண்டிய பேருந்து வந்ததும் என்னை ஏற்றிவிட்டு நீங்கள்
செல்லலாமே என்றான். ஏன்டா தம்பி நீ செல்லவேண்டிய பள்ளிக்குத் தான் நிறைய பேருந்துகள் வருமே நீயே செல்லலாமே என்னை ஏன் காத்திருக்கச் சொல்கிறாய் என்றேன். அதற்கு அவன்,
ஆம் அண்ணா நிறைய பேருந்துகள் வருகின்றன. ஆனால் அதில் பல பேருந்துகளில் தமிழிலேயே ஊர்ப்பெயர்
எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலமாக இருந்தால் நான் விரைவாகப் படித்துவிடுவேன். தமிழ்
என்பதால் எனக்குப் படிக்கத்தெரியாது என்றான் அதிர்ந்துபோன நான். அவனைப் பேருந்தில் ஏற்றிவிட்டு அன்று மாலை அவன்
பெற்றோரிடம் உங்கள் பையனுக்கு பேருந்துகளில் இருக்கும் ஊர்ப்பெயர்களைக் கூடத்
தமிழில் படிக்கத்தெரியவில்லையே ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,
சிரித்துக்கொண்டே பெருமிதத்துடன் ஆமா ஆமா எங்க பையனுக்கு தமிழ் எழுதப்
படிக்கத்தெரியாது. நாங்க அவனை சிறுவயதிலிருந்தே ஆங்கிலவழிப் பள்ளியில் தான் படிக்கவைத்திருக்கிறோம்.
ஓரளவு தமிழ் பேசுவான். தமிழில் பேசினால் புரிந்துகொள்வான் என்றார்கள். இதைச் சொல்லும்போது அவர்களுக்கு எவ்விதமான மனவருத்தமும் இல்லை.இவ்வளவுக்கும்
இந்தக் குடுப்பத்தாரின் தாய்மொழியும் தமிழ்தான்.
இவர்களைப் பார்த்து அழுவதா?சிரிப்பதா? என்றே எனக்குத் தெரியவில்லை!
இன்றைய தலைமுறையினரே இப்படியிருக்கிறார்கள் என்றால்
நாளைய தலைமுறை???
இப்ப நிறையப் பேர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமலேயே வளர்க்கிறார்கள் முனைவரே....
பதிலளிநீக்குஎன்ன செய்வது காலத்தின் கோலம்....
உண்மைதான் நண்பா காலம்தான் இவர்களுக்குப் பதில்சொல்லவேண்டும்.
நீக்குஇனிய வணக்கம் முனைவரே...
பதிலளிநீக்குநலமா?
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் தளம் பக்கம் வருகை...
அருமையானதொரு ஆக்கம் மூலம் வரவேற்பு...
வேதனைக்குரிய செய்திப் பகிர்வு முனைவரே...
ஆங்கிலம் மற்றும் பிறமொழி மோகமும்
ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் தமிழ் படிக்கத் தெரியாது
என்று சொல்லி பவுசும் பம்மாத்தும் செய்துகொள்ளும்
பெற்றோர்கள் இருக்கும்வரை இந்த செய்தி பெரும் சுமை தான்...
==
வீடுகளில் நாளிதழ்கள் வாங்கி (தமிழ் நாளிதழ்) சிறுவயதிலிருந்தே
வாசிக்கச் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்...
பிறந்தநாட்களில் பம்மாத்து பரிசு கொடுப்பதை விட்டொழித்து
புத்தகங்கள் பரிசளிப்பதை முனைப்பாக்க வேண்டும்...
==
நம் மொழி..
நாம் ஏன் எதற்காக யாருக்காக
விட்டுக்கொடுக்க வேண்டும்...
நம் மொழியை நன்கு அறிந்து தெரிந்து வைத்திருந்தால்
நம் முன்னேற்றம் தடைப்பட்டுவிடுமா
என்ற எண்ணம் மனதில் உதிக்க வேண்டும்...
சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளை கண்டாவது
நம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்...
அருமையானதொரு சம்பவம் சொல்லி ஏற்றத் தகு
படைப்பினை கொடுத்ததற்கு நன்றிகள் பல முனைவரே...
தாங்கள் கூறும் வழிமுறைகள் வரவேற்கவேண்டியன நண்பரே.
நீக்குதமிழ் நாட்டின் தெருக்களில்
பதிலளிநீக்குதமிழ்தானில்லை
என்று முன்னர் சொன்னது
இப்பொழுது நடக்கிறது
ஆம் ஐயா.
நீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம்...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.
நீக்கு;-(
பதிலளிநீக்குரொம்ப கஷ்டம்.... வெளிநாட்டில் வாழ்ந்தாலும் என் மகன் எங்களை அப்பா அம்மா என்றுதான் அழைக்க பழகிக் கொடுத்திருக்கிறேன்...அதிலுள்ள சுகமே தனி. தமிழில் படிக்கத்தெரியாது என சொல்வது லேட்டஸ்ட் ஃபேசன் போல..(11)
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி மணிமாறன்.
நீக்குஎன் பிள்ளைகள் இருவருமே, ஏன் நானும் கூட ஆங்கில வழிக்கல்வியில்தான் படித்தோம். ஆனால் அனைவருமே வீட்டில் சிறுவயது முதலே தமிழில் எழுத, படிக்க கற்றுக்கொண்டோம்.
பதிலளிநீக்குகல்விக்கு ஆங்கிலம், வீட்டுக்கு தமிழ் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக இருந்தது. ஆங்கிலம் பேசுவது ஒரு தனி அந்தஸ்த்தைக் கொடுக்கிறது என்று சில பெற்றோர்கள் நினைப்பது அவர்களுடைய அறியாமையையே காட்டுகிறது.
கல்விக்கு ஆங்கிலம், வீட்டுக்கு தமிழ் என்பதுதான் எங்களுடைய கொள்கையாக இருந்தது.
நீக்குதங்கள் கொள்கை பாராட்டுதலுக்குரியது.