வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 31 ஜூலை, 2013

இன்று செய்குத்தம்பி பாவலர் பிறந்தநாள்

  • இன்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இவர் ஜூலை 311874 - பெப்ரவரி 131950) சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவராவர்.
  • ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னு கலையில் சிறந்து விளங்கியவர்.
  • தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிசென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர். 
  •  சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும் எழுதினார்.
  • பாவலரின் அரிய தொண்டினை அரசும், மக்களும் மறக்க இயலாது. பாவலர் மற்றும் கவிமணி விழாக்களை அரசு ஆண்டுதோறும் நடத்துகிறது. பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு 'பாவலர் தெரு' என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசுமேல்நிலைப் பள்ளிக்கு ' சதாவதானி பாவலர் அரசுமேல்நிலைப்பள்ளி' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இடலாக்குடியில் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.
  • இந்திய அரசால் 31 திசம்பர் 2008 அன்று இவரது நினைவாகச் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.

3 கருத்துகள்:

  1. தகவல்களுக்கும் சிறப்பித்தமைக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஒரு சமயத்தில் ஒன்றிரண்டு வேலைகள் செய்வதே பெரும்பாடாக இருக்க, இவர் 100 வேலைகளை செய்பவர் என்று அறிந்து மகிழ்ச்சி......

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெருமைக்குரிய மாமனிதரின் நினைவுநாளை நினைவு கூர்ந்த விதம் பாராட்டத் தக்கது .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு