வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

எதிர்பாராத பதில்கள்


முல்லா என்பவரை அனைவரும் அறிவாளி என்று கூறுவர். ஆனால் அவரது இரு நண்பர்களும், முல்லா ஒரு முட்டாள், ஆனால் அனைவரும் அவரை அறிவாளி என்று கூறுகிறார்கள். அவரை ஒரு சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று முயற்சி எடுத்து முல்லாவை மேடையில் பேச அழைத்தார்கள்.

முதலாவதாக முல்லா மேடையேறி 
“நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். அனைவரும் தெரியாது என்று கூறினார்கள். நான் என்ன பேசப்போகிறேன் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. நான் எதற்காக உங்களிடம் பேசவேண்டும்? என்று கூறிவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.

இரண்டாவதாக, முல்லாவின் இரு நண்பர்களும் இப்படி முல்லா இறங்கிவிட்டாரே என நினைத்துவிட்டு மறுபடியும் முயற்சியெடுத்து முல்லாவை மேடைக்கு அனுப்பினர். மேடையேறியவுடன் முல்லா,
“நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். அனைவரும், போனதடவை தெரியாது என்று சொன்னதால் முல்லா மேடையைவிட்டு இறங்கிவிட்டார். அதனால் இந்தமுறை அவரைப் பேசவைக்கவேண்டும் என்று சிந்தித்து அனைவரும் “தெரியும்“ என்று சொன்னார்கள். அதற்கு முல்லா, நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்கே தெரியும் மறுபடியும் நான் ஏன் பேசவேண்டும் என்று மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.

மறுபடியும் இவரைப் பேசவைக்கவேண்டும் என்று முயற்சித்து இரு நண்பர்களும், முல்லாவை மேடைக்கு அனுப்பினர். முல்லா முன்பு போலவே “நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். தெரியாது என்று சொன்னாலும் தெரியும் என்று சொன்னாலும் இவர் மேடையைவிட்டு இறங்கிவிடுகிறார் என்று மக்களெல்லாம் மிகவும் யோசித்துக்கொண்டிருந்தனர். அதனால் பாதிபேர் தெரியும் என்றும் பாதி பேர் தெரியாது என்றும் கூறினார்கள்.
முல்லா சொன்னார்.
தெரியாதவர்களெல்லாம், தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
முல்லா அறிவாளி என்று ஏன் எல்லோரும் சொல்கிறார்கள் என்பதை இரண்டு நண்பர்களும் இப்போது உணர்ந்தார்கள்.
                          
பிடித்த கதையை எடுத்துச் சொன்னவர்.

                                               பா. முத்துலெட்சுமி
இரண்டாமாண்டு வணிகவியல் (கணினிப் பயன்பாடு)
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.

8 கருத்துகள்:

  1. பேசாமலே நிரூபிச்சிட்டார் அவர் ஒரு அறிவாளின்னு.

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் இடக்கு மடக்கான ஆசாமி போல இருக்கே !
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. முல்லா கதைகள் சுவராஸ்யமானவை தான்

    பதிலளிநீக்கு
  4. முல்லவைப்பற்றி சுவாரசியமான கதை.

    பதிலளிநீக்கு
  5. முல்லாக் கதைகள் மத்தியக் கிழக்கின் நையாண்டி இலக்கியம், இப்போ அதெல்லாம் மறைந்து நையப்புடைக்கும் மனோபாவமே அங்குள்ளது வெறுமை..

    பதிலளிநீக்கு