பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

சனி, 5 ஜனவரி, 2013

அகவிழியர்


“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
” (திருக்குறள் 393)
என்பார் வள்ளுவர்.

சாலையின் நடுவே கிடக்கும் கல்லைக் கண்தெரிந்தவர்கள் கண்டும் காணாமல் செல்லும்போது..
கண்தெரியாத ஒருவர் தட்டித்தடுமாறி அந்தக் கல்லை தடவி எடுத்து ஓரமாகப் போட்டுச்செல்வதைக் காணும்போதும்..

சாலையில் அடிபட்டுக்கிடப்பவரைக் கண்டும்காணமல் நாம் செல்லும்போதும்..
குற்றம்செய்தவர் இவர்தான் என்று தெரிந்தும் வாய்திறக்காமல் இருக்கும்போதும்.

கண்களிருந்தும் எழுத, படிக்கத் தெரியாதவர்களைக் காணும்போதும்..

மனது கேட்கிறது நமக்கெல்லாம் கண்ணிருந்தால் என்ன?
இல்லாவிட்டால் என்னஎன்று..

உடல் திறன்குறைபாடு உடையவர்களை,

செவிடர், முடவர், நொண்டி, உடல் ஊனமுற்றவர், என்றெல்லாம் ஒருகாலத்தில் சொல்லிவந்தோம் இப்போதெல்லாம் ஊடகங்களும், பொதுமக்களும் கூட இவர்களை, Physically challenged person, மாற்றுத் திறனாளிகள் என்றுதான் அழைக்கின்றனர்.

எனக்கு நீண்ட நாட்களாகவே கண்பார்வையற்றோரையும் இவ்வாறு நேர்மறையான வார்த்தையில் அழைக்கலாமே என்ற எண்ணம் இருந்துவந்தது.

குருடர், கண் பார்வையற்றோர், விழியிழந்தோர், கண் தெரியாதவர்கள் போன்ற சொற்களை இன்றைய சூழலில் பலரும் பயன்படுத்தி வருகிறோம்.

இவர்களை நாம் ஏன் அகவிழியர், அகவிழியுடையோர் என்று அழைக்ககூடாது?

இப்போதெல்லாம் கண்பார்வையற்றவர்களும் தம் நாவினால் பார்க்கலாம் என்றெல்லாம் அறிவியல் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதனால் தமிழ் உறவுகளே...
ஊடகங்களே....
 இனிமேல் கண்பார்வையற்றவர்களை அகவிழியர், அகவிழியுடையோர் என்று அழைக்கலாமே......











28 கருத்துகள்:

  1. vanakkam thiru munaivar ira gunaseelan avargale,
    agavizhiyor migavum poruththamaaga ulladhu anaivurum idhaye pinpattruvom nandri
    surendran
    surendranath1973@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேந்திரன் ஐயா.

      நீக்கு
  2. நல்ல வார்த்தை அப்படியும் அழைக்கலாம் தப்பில்லை

    பதிலளிநீக்கு
  3. அழவிழியர் நிச்சயம் அவர்களுக்கு அக மகிழ்வைத் தரும்.

    பதிலளிநீக்கு
  4. புதிய சொல்லில் நம்பிக்கையை ஒளி பெறச்செய்துள்ளீர்கள். நிச்சயம் இதை மற்றவர்களிடம் பகிர்கிறேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு முயற்சி! அகவிழியர்! அழகான தமிழ்பெயர்! அழைக்கலாம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வைக்கும் பதிவு. நம்மைக் குறித்த கேள்விக் கணைகளை எழுப்பியது நீதி வெண்பா. அகவிழியர் பயன்பாட்டிற்கு முயற்சிப்போமே ...நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி எழில்.

      நீக்கு
    2. மண்ணிற்கு போகும் மணிக்கண்கள் - கண் தாணம் செய்வோம்.

      நீக்கு
    3. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சிவசங்கரன்.

      நீக்கு
  7. சிந்திக்க வைக்கும் பதிவு அய்யா, அகவிழியார் அருமையான சொல்.

    பதிலளிநீக்கு
  8. அகக்கண் திறக்கவைக்கும்
    அருமையான சொல் அகவிழியார் ..!பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. அகவிழியர் உண்மையில் மிகப் பொருத்தமான வார்த்தை.இது வழக்கு சொல்லாக மாற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு சொல்லைக் கொடுத்திருக்கிறீர்கள், முனைவரே. பதிவுலகம் பயன்படுத்த ஆரம்பித்தால் வழக்குச் சொல்லாக மாறிவிடும் வெகுவிரைவில்.

    உங்களுக்கு எத்தனை கண்கள் என்று கேட்டிருக்கிறீர்களே அதுதான் யோசிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  11. நல்ல சிந்தனை.
    அருமையான ஆய்வு.
    வாழ்த்துக்கள் முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு