பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அரும்பாகி மொட்டாகிப் பூவாகி..



காலை அரும்பி பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்


திருக்குறள் -  1227

என்ற குறளைச் சொல்லிக்கொடுத்துவிட்டு தேர்வில் கேள்விகேட்டால் 

இன்றைய மாணவர்கள், போதாகி என்ற சொல்லைப் போதையாகி என்று எழுதுகிறார்கள். 

காரணம், போது என்ற சொல் இவர்களுக்குத் தெரியவில்லை.

எவ்வளவு இனிமையான குறள் இது. இதனை மனப்பாடம் செய்வதால் இன்றைய தலைமுறையினருக்கு மதிப்பெண் மட்டுமே கிடைக்கிறது.


காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.

என்ற இந்தக் குறள் பல திரைப்படப் பாடல்களுக்குக் கருவாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது..

1.அரும்பாகி மொட்டாகிப் பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தைக் காட்டு..
கையிரண்டு சேர்த்து...


என்றொரு பாடல் எங்க ஊருக் காவக்காரன் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.

2. காலை அரும்பி பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்
மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்
மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்
ஆடும்... ஆடும்.. ஆடும்....
வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 
வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்

னாக் கண்டேன் திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கவிதை இது..


இவ்வாறு பல திரையிசைப்பாடல்களுக்கு தமிழ் இலக்கியங்கள் அடிப்படைகளாக இருந்திருக்கின்றன.

தொடர்புடைய இடுகை

ஊதைக் காற்று

மாலைப் பொழுதின் மயக்கத்திலே

12 கருத்துகள்:

  1. அகவிழியர் என்ற சொல் தினமலர்-பெண்கள் மலரில் தெரிவிக்க பட்டிருந்த்து அது குறித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். பார்வைக்கு வந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டேன் மகிழ்ந்தேன் உஷா அன்பரசு. தங்கள் பரிந்துரைக்கு நன்றிகள்.

      நீக்கு
  2. அருமையான குறளுக்கு நன்றி! திருக்குறளை மட்டும் அல்ல, நம் இலக்கிய நூல்களையும் வரலாறையும் மதிப்பெண்ணிற்காக மட்டும் அல்லாமல் உணர்ந்து படித்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி கிரேஸ்

      நீக்கு
  3. இலக்கியத்தின் தூண்டுதலினால் பிறந்த தமிழ்ப்படப் பாடல்களைப் பட்டியலிட்டால் நீளமாக இருக்கும். தற்காலங்களில் தேடித் தேடி ஒன்றிரண்டுதான் கண்ணில் படுவுது வருத்தமான விஷயம் முனைவரையா. இசையின் இரைச்சல் கன்னாபின்னா சொற்களை எழுதுவதற்‌கே வழிவகுக்கும் நிலை இப்போது. போகட்டும்... உங்களின் அழகுத் தமிழை (சற்றே இடைவெளிக்குப்பின்-என் வரையில்) ரசித்து ருசித்ததில் எனக்கு மிக மகிழ்வு.

    பதிலளிநீக்கு
  4. மிக அழகிய குறள், சிறப்பான விளக்கம். நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  5. தரமான விளக்கம் . அப்படியே நெஞ்சுக்குள் நிலைகொள்ளும் தன்மை உடையது

    பதிலளிநீக்கு
  6. அருமையான தமிழை அழகாக எடுத்துரைக்கும் தங்கள் பணி சிறப்பானது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு