11.01.1932
அன்று இதே நாளில் தான் திருப்பூர் குமரன் அவர்கள் நாட்டுக்காகத் தன் இன்னுயிரைத்
தந்து கொடிகாத்த குமரனாக நம் மனதில் நிறைந்தார்.
எல்லோரும்
புதைக்கப்படுவதில்லை சிலர் விதைக்கப்படுகிறார்கள் என்றொரு
பொன்மொழி உண்டு. அதுபோல இவர் உடல் மறைந்தாலும் விடுதலைப் போராட்டகாலத்தில் இவருடைய
மரணம் பலர் மனதில் விடுதலைப்போராட்ட வேட்கையை விதைத்துச் சென்றது.
ஈரோடு
மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் (04.10.1904) பிறந்தார். சட்டமறுப்பு இயக்கம்
மீண்டும் தொடங்கியபோது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில்
தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் தீவிரமாகக்
கலந்துகொண்டு கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமையேற்றுச் சென்றார்
குமரன். அன்று (11.01.1932) இதே நாளில் காவலர்களால் தாக்கப்பட்டு தலையில்
தடியடிபட்டு இந்திய தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர்
மருத்துவமனையில் உயிர்துறந்தார். தன் உயிர் தன் உடலைவிட்டுப் பிரியும் வரை கொடியை
துறக்காததால் இவரைக் கொடிகாத்த குமரன் என்று நாம் அழைத்துவருகிறோம்.
இன்று பலருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும்தான்
நாட்டுப்பற்று வெளிப்படுகிறது..
திரைப்படங்கள் பார்த்து, நடிகர்களிடம் பேட்டிகண்டு தான் சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
நம்
குழந்தைகளிடம் சொல்வோம்...
திருப்பூர்
குமரன் ஒரு விடுதலைப் போராட்ட தியாகி. நம்நாடு அன்று அடிமைப்பட்டுக்
கிடந்தது இவரைப்போல பல தியாகிகளால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்கிறோம் என்று.
இந்த நாளில்
அவரின் பெருமைகளை எண்ணிப்பார்ப்போம்..
எடுத்துச்சொல்வோம்..
அவரது தியாகத்தைப் போற்றுவோம்..
11-01- கொடிகாத்த குமரன் நினைவுநாள்.
பதிலளிநீக்குகோடிகாக்கும் தலைவர்களுக்கிடையே வாழ்ந்து மரத்துப் போன நமக்கு, கொடிகாத்த வீரனைப் பற்றி அருமையான செய்தியினைச் சரியான நேரத்தில் நினைவு படுத்தி வெளியிட்ட தங்களுக்கு நன்றி.
இதுபோலும் பணிகள் தொடர வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முத்துநிலவன்.
நீக்கு// இன்று பலருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும்தான்
பதிலளிநீக்குநாட்டுப்பற்று வெளிப்படுகிறது..
திரைப்படங்கள் பார்த்து, நடிகர்களிடம் பேட்டிகண்டு தான் சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார்கள்//
உண்மையான கேள்வி!
தேசப்பற்றை நிச்சயம் நினைவு கூர்வோம்! நன்றி!
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு.
நீக்குஅருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழ்தோட்டம்
நீக்குகண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய நாளும் ,நிகழ்வும் ... ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி எழில்
நீக்குஅருமையான தகவல். மீடியாக்கள் செய்யாவிட்டாலும் பதிவில் நாம் நாட்டுபற்றை பறை சாற்றுவோம்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கோவி.
நீக்குவெல்க பாரதம்!(தண்ணீர் விட்டோ வளர்த்தோம்,கண்ணீரால் காத்தோம்,கருகத் திருவுளமோ?)
பதிலளிநீக்குசர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள் முனைவர் ஐயா
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி குட்டன்.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி
நீக்குஎல்லோரும் புதைக்கப்படுவதில்லை சிலர் விதைக்கப்படுகிறார்கள் - உண்மைதான்...
பதிலளிநீக்குவிதைக்கப்பட்டவர்களை நாம் எங்கே நினைவில் நிறுத்துகிறோம்... சினிமா வியாபாரிகள்தானே இப்போது நம்மை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி குமார்.
நீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி எழில்
பதிலளிநீக்கு