பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 2 ஜனவரி, 2013

ஆயிரம் பொ(போ)ய் சொல்லித் திருமணம்.


ஆயிரம் பொய் சொல்லியும் திருமணம் செய்யலாம் என்றொரு பழமொழி வழக்கில் உள்ளது. இதன் காரணம் இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறதா? என்று பார்க்கலாம் என்று என் மாணவர்களிடம் கேட்டேன். இதன் பொருள் உங்களுக்குத் தெரியுமா? என்று ஒரு மாணவர் எழுந்து சொன்னார். ஐயா எனக்குத் தெரியும் என்று..

நானும் மகிழ்வோடு சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார்.

ஐயா உண்மையைச் சொன்னால் யாருக்கும் கல்யாணம் நடக்காது அதுதான் நம் முன்னோர் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று..

இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவரது நகைச்சுவையுணர்வைப் பாராட்டிவிட்டு அதன் பொருளை இவ்வாறு கூறினேன்.

“ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழி.. காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.

அதனால் ஆயிரம் முறை நம் உறவுகளுக்கும் சுற்றத்தினருக்கும் போய் சொல்லி அனைவரது அன்புநிறைந்த வாழ்த்துகளோடும் செய்துகொள்வதே திருமணம் என்று சொன்னேன்.







திருமணம் தோன்றிய சூழல்.

12 கருத்துகள்:

  1. உண்மை,பழமொழிகள் நாளைடைவில் திருகியும் வருகின்றன

    பதிலளிநீக்கு
  2. ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழி.. காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.

    காலத்திற்கேற்ப மாறியிருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

      நீக்கு
  3. ரசிக்க வைத்தது நகைச்சுவை. உங்களுக்கு என் இதயம் நிறைந்தஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் முனைவரையா.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. 'பொய்மையும் வாய்மையிடத்து' எனும் வள்ளுவத்தை கருதியிருந்தேன் இத்தனை நாளும் இப்பழமொழிக்கு! புதிய விளக்கத்துக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமான பகிர்வு.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. இது எனக்கு புதிய தகவல்.. நன்றிகள் முனைவர் ஐயா..

    பதிலளிநீக்கு