முதுமை ஒரு வரம்
அது எல்லோருக்கும் வாய்க்காது!
“வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள் அந்தவாய்ப்பு
எல்லோருக்கும் கிடைப்பதில்லை“
என்றொரு பொன்மொழி இருக்கிறது.
கருவுற்ற நிலையிலிருந்து இன்று வரைநாம் எத்தனை தோற்றங்களை இழந்து வந்திருக்கிறோம்..
நாம் நினைத்தாலும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்குச் செல்லமுடியுமா..?
சரி அதற்காக என்றாவது அழுதிருக்கிறோமா?
நாளும் நாளும் சாகும் நாம் என்றாவது நமக்காக அழுதிருக்கிறோமா?என்று நம்மைச் சிந்திக்கச் சொல்கிறது இந்தப்பாடல்..
“பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ“
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ“
குண்டலகேசி -9
பிறப்புக்கும் இறப்பும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையில் இளமை
என்பதும் முதுமை என்பதும் நாணயத்தின் இருபக்கங்கள்
போன்றவை!
எண்ணிப்பார்ப்பதும் பலருக்கும் ஏற்படும் ஆசைதான்.
அன்றெல்லாம் சோதிடர்கள் இந்த வேலையைச் செய்தார்கள் இப்போது
இதற்கெல்லாம் கூட இணையதளங்கள் வந்துவிட்டன..
இந்த இணையதளம் சரியாக நமது எதிர்காலத் தோற்றத்தைக்
காட்டாவிட்டாலும் கிட்டத்தட்ட காட்டுகிறது.
குறிப்பாக இந்த இணையதளத்தில் எனக்குப் பிடித்த கூறு என்னவென்றால்,
முதலில் நம் நிழற்படத்தை இதில் பதிவேற்றியபிறகு..
ஆணா? பெண்ணா? என்று இவ்விணையம் கேட்கிறது.
அடுத்து நீங்கள் போதைக்கு அடிமையானவரா?
என்று கேட்கிறது.
போதைக்கு அடிமையானவர் என்றால் பதிவேற்றுபவரின் உருவம் மிகவும் தளர்வாக வருகிறது.
இப்படியொரு தோற்றத்தைப் பார்த்தாவது போதையாளர்கள் திருந்துவார்கள் என்பது இவ்விணையதளத்தில் எனக்குப்பிடித்த கூறாக உள்ளது.
இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் தோற்றம் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்த முகவரிக்கு வாங்க..
தொடர்புடைய இடுகை.
பதிலளிநீக்குஎந்த வயதில் போவோம் என்பது நமக்குத் தெரியாது. அந்த வயது வரை இருப்போமா... என்று எண்ணமில்லாமல் கடைசி வரையில் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். ஆனால் எப்படி தோற்றமளிப்போம் என்ற எண்ணம் வருவதில்லை.
உங்கள் பதிவைக் கண்டதும் அதை நினைக்கத் துாண்டுகிறது.
நன்றி முனைவர் ஐயா.
nalla pakirvu ayya....
பதிலளிநீக்குNice.,
பதிலளிநீக்குஏனோ வயதாகிவிடுவது குறித்து யோசிப்பதே இல்லை எதிர்காலத்தை அதிகமாக யோசித்தால் நிகழ்காலத்தை வாழவே மாட்டோம் என்பது என் கருத்து...
பதிலளிநீக்கு##போதைக்கு அடிமையானவர் என்றால் பதிவேற்றுபவரின் உருவம் மிகவும் தளர்வாக வருகிறது.
இப்படியொரு தோற்றத்தைப் பார்த்தாவது போதையாளர்கள் திருந்துவார்கள் என்பது இவ்விணையதளத்தில் எனக்குப்பிடித்த கூறாக உள்ளது.## எனக்கும் பிடித்தது