பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

11வது உலகத்தமிழ் இணையமாநாட்டு நினைவுத்துளிகள்.

                                            


                    சிதம்பரத்தில் நடைபெற்ற 11வது உலகஇணையத்தமிழ் மாநாட்டில் இணையத்தில் தமிழ் இனி என்ற தலைப்பில் கட்டுரை
வாசித்தேன். பலநாடுகளிலிருந்தும், பலதுறைகளிலிருந்தும்  வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகள் யாவும் இணையத்தில் தமிழின் வளர்ச்சியை அடுத்த படிநிலைக்கு அழைத்துச்செல்வனவாக இருந்தன. மாநாட்டில், மு.இளங்கோவன் ஐயா,முனைவர் மணிகண்டன் ஐயாமுனைவர் சிதம்பரம் ஐயாமுனைவர் இறையரசன் ஐயாமுனைவர் கல்ப்பனா அம்மாபேராசிரியர் தமிழ்ப்பருதிஐயா உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்துகருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமை மனநிறைவைத் தந்தது. விஸ்வல் கம்யுனிக்கேசன் செல்வமுரளி அவர்களின் கண்டுபிடிப்புகளும்தமிழின் மீது அவருக்கிருந்த ஆர்வமும் பாராட்டுதலுக்குரியது. தமிழ் இணையப் பல்கலைகக்கழத்தின் குறுவட்டுகள்,  கலைச்சொல்லாக்கத்தொகுப்புகள் அனைத்தும் தமிழின்
வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளமுடியும்.ஊடகத்துறை சார்பாக பல தமிழ் மென்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எசாரெம் பல்கலைக்கழம் சார்பாக சந்திஇலக்கணம் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த மென்பொருள் சிறப்பாக இருந்தது. விழாவில்
துணைவேந்தர் பொன்னவைக்கோ ஐயா பேசும்போதுஇணையத்தி்ல்
தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சிப் படிநிலைகளைச் சொல்லி நாமெல்லாம் ஒற்றுமையாக செயல்பட்டால் மிகவிரைவில் தமிழ் உயர்ந்த நிலையை அடையும் என்றார். பார்வையாளர்கள் பலரும் வந்து  ஆர்வத்துடன் கலந்துகொண்டு இணையத்தில் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், கணித்தமிழ்ச்சங்கம், உத்தமம், செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகிய தமிழ் அமைப்புகளின் கூட்டுமுயற்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாநாடு இணையத்தில் தமிழ் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடையப் பெரிதும் துணைநிற்கும் என்பதை உணரமுடிந்தது.             

12 கருத்துகள்:

  1. இணையத் தமிழ் வளர்ச்சிக்கு இது போன்ற மாநாடுகள் உதவும். தமிழ் அறிஞர்கள் இணைய வல்லுனர்கள், மென்பொருளாளர்கள் இணைந்து செயல் படுவது வரவேற்கத் தக்கது. நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

      நீக்கு
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குட்டன் தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மா தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு