இந்த உலகில் யாரும் யாரையும் மாற்றமுடியாது.
நாமே நம்மை மாற்றிக்கொண்டால்தான் உண்டு.
நம்மாற்றமே இன்னொருவரின்
மாற்றத்துக்கு அடிப்படையாக இருக்கும்
என்பதே உலகியல் உண்மை.
விவேகானந்தர் சொன்ன கதை..
எல்லாம் நிறைவேறும் எனக் கருதி ஒரு முனிவரை அணுகித் தொந்தரவு செய்ய அவரும்,''நான் உனக்கு அடிமையாய் ஒரு பூதம் தருகிறேன்,
ஆனால் அதற்கு நீ தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் அது உன்னையே கொன்று விடும்,''என்று கூறி தன ஆற்றலால் ஒரு பூதத்தை வரவழைத்து அவனிடம் கொடுத்தார்.
அவன் கட்டளைகளைச் சொல்லச் சொல்ல பூதம் உடனுக்குடன் செய்தது.ஒரு நிலையில் என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் நிற்க பூதம்அவனைக் கொல்ல வந்தது.அவன் மீண்டும் முனிவரை தஞ்சம் அடைந்தான்.முனிவர் சொன்னார்,''உன் பூதத்திடம் ஒரு நாயின் வாலை நிமிர்த்த சொல்லு,'' என்றார்.அவனும் அவ்வாறே பூதத்திடம் உத்தரவிட,பூதம் முயற்சி செய்து முடியாமல் போகவே களைத்துப்போய்,ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டது.
இந்த உலகமும் நாயின் வால் போல் தான் உள்ளது.
அதை நிமிர்த்த மனிதர்கள் காலம் காலமாய் முயன்றும்
இன்னும் சரி செய்ய முடியவில்லை...
அது முடியாது முனைவரே..
பதிலளிநீக்குஅடுத்தவர்கள் என்றால் சந்தேகம் தான்...
பதிலளிநீக்குநம் வாலை என்றால் சரி...
த.ம.4
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?!
பதிலளிநீக்குஆகா....அருமை !
பதிலளிநீக்கு