பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 27 நவம்பர், 2012

தங்கம் நேற்று - இன்று - நாளை?


தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் 

சீனாவும் உள்ளதாம்.

இன்று நேற்றா இந்த நிலை சங்ககாலத்திலிருந்தே தமிழர்கள் இப்படித்தானே 

இருந்திருக்கிறார்கள்

சங்ககாலத்தில் வணிகம் செய்யவந்த யவணர்கள் பெரிய மரக்கலங்களில் தங்கத்தைக் கொண்டு வந்து அதனை விலையாகத்தந்து மிளகை அள்ளிச்சென்றுள்ளனர்.அற்றைக் காலந்தொட்டே தமிழர்கள் தங்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கின்றனர். ஆனால் யவணர்கள் மிளகின் மருத்வகுணம் அறிந்தே மிளகை அள்ளிச் சென்றுள்ளனர்.



1930–ம் ஆண்டு முதல் ஒரு சவரன் தங்கத்தின் விலை..


1930 – ரூ.14




1935 – ரூ.24



1940 – ரூ.28



1945 – ரூ.49



1950 – ரூ.79



1955 – ரூ.63



1960 – ரூ.88



1965 – ரூ.56



1970 – ரூ.147



1975 – ரூ.432



1980 – ரூ.1064



1985 – ரூ.1544



1990 – ரூ.2520



1995 – ரூ.3600



2000 – ரூ.3480



2005 – ரூ.4640



2006 – ரூ.7680



2007 – ரூ.7600



2008 – ரூ.9200



2009 – ரூ.10944



2010 – ரூ.12500



2011 – ரூ.21120


இன்றைக்கு - ரூபாய் 26252


நாளை?



தொடர்புடைய இடுகை

தங்கத்தைவிட மதிப்புமிக்கது

மிளகுக்கு இணையா தங்கம்?

25 கருத்துகள்:

  1. தங்கம் உலகப்பொது கரன்சி எனபதனாலும் இருக்கலாம்.
    இந்தியாவின் தங்க ஆசை நகைகள் காரணமாக என்றால் சைனாவின் தங்க பயன்பாடு என்னவென்று தெரியவில்லையே? ஒருவேளை நகை செஞ்சு மத்த நாடுகளுக்கு விக்கிறாங்களோ?
    தங்க விலை விவரம் சுவாரசியம். விலைவாசி எப்படி உயர்ந்திருக்கு. பதினாலு ரூபாய்க்கு வாங்கியது நூறு வருஷத்துக்குள்ள ஆயிரத்தைனூறு மடங்குங்கு மேல் உயர்ந்திருப்பது திடுக்கிட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி அப்பாதுரை

      நீக்கு
  2. நான் கல்யாணம் பண்ணும்போது பவுன் 4500 ரூவா முனைவரே.. அப்பவே 10 பவுனு சேத்து வாங்கியிருந்தா.. இன்னைக்கு பிரச்சனையில்லாம இருந்திருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் நமக்கில்லையே கவிஞரே.

      நீக்கு
  3. ...ம்... ஒன்றும் சொல்வதற்கில்லை...

    தகவல்களுக்கு நன்றி முனைவரே...
    த.ம.2

    பதிலளிநீக்கு
  4. இதெல்லாம் சரிதான்,ஆனால் படக்கென 2005 லிருந்து ஏன் பாய்ச்சல் வேகத்தில் செல்ல வேண்டும்,இது தற்செயலா அல்லது ஏற்படுத்தப்பட்டதா? என்பதுவே இந்த நேரத்தின் மிக முக்கிய கேள்வியாக/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி விமலன்.

      தங்கள் கேள்விக்கான பதிலை அன்பு நண்பர் புரட்சித் தமிழன் அவர்கள் தெரிவித்துள்ளார்.அவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



      2008ல் உருவான பங்குசந்தை சரிவைத்தொடர்ந்து தலைதூக்கிய கமடிட்டீ மார்கெட் என்று சொல்லகூடிய பொருள்வணிகத்தில் தலை தூக்கிய தரகு நிறுவனங்களும் அதன் விளம்பரபங்களும் மக்களை தங்கம் வாங்கி குவிக்கும் ஆசையை உந்தியதே காரனம். மேலும் 2008 ஆம் ஆண்டின் பங்குசந்தை சரிவிர்க்கு காரனம் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குவெளியீடும் அதனை தரகர்களும் ஊடகங்களும் பணத்தை பெற்றுகொண்டு ரூ 10 முகமதிப்புள்ள பங்குகளை வெளிவந்தவுடன் ரூ 1000 த்தை தாண்டும் என்ற பிரச்சாரமும், அதனைத்தொடர்ந்து ஒரே நாளில் 12 லட்ச்சம் கோடிக்கும் அதிகமான பணம் சந்தையில் இருந்து இந்த பங்குகளை வாங்க வெளியில் எடுத்ததுதான்.

      நீக்கு
  5. நன்றாகச் சொன்னீர்கள் மிளகுக்கு நிகர் ஏது. வயிற்று வலிவந்தால் மிளகின் அருமை தெரியும்.

    பான்சி நகைகள் பலரும் நாகரீகமாக அணிகிறார்கள் தங்கம் அணிவது குறைந்துள்ளது இருந்தாலும் தங்கம் விலை அதிகரித்துத்தான் போகிறது ?

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! அருமையான தகவல்கள் நண்பரே நான் பிறந்தவருடம் 1980 அதற்கு முன்புவரை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த தங்கம், அதன்பிறகுதான் படிப்படியாக உயர்ந்துள்ளது.
    எல்லாம் நான் பிறந்தநேரம் என்று நினைக்கிறேன். ஹா ஹா ஹா ஹா

    சும்மா! நகைச்சுவைக்கு,

    தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி செம்மலை ஆகாஷ்

      நீக்கு
  7. எப்படி “விஷம் போல” ஏறியிருக்கிறது விலை!பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. தங்கம் விலைப் பட்டியல்.... நன்று. அம்மா சொல்வார்கள் அவர் கல்யாணத்தின் போது இவ்வளவுதான் என்று.... அந்த விலைக்கு இன்று தங்கம் என்று எழுதிக்கூட வாங்கமுடியாது.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அன்பரே நாமும் சொல்வோம் நம் குழந்தைகளிடம் எங்ககாலத்துல இவ்வளவுதான் என்று.

      தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி அன்பரே.

      நீக்கு
  9. 14 ரூபாயில் இருந்து 26000 ரூபாயா? பிரம்மாண்ட வளர்ச்சிதான்! என்று குறையும் இந்த தங்க நகை மோகம்!

    பதிலளிநீக்கு
  10. தகவலுக்கு நன்றி! தங்க விலை எப்படி ஏறிப் போயிருக்கிறது..பிளாஸ்டிக் வளையல்,பாசி வாங்காமல் தங்கம் வாங்கி வைத்திருக்கலாம் போல...

    பதிலளிநீக்கு
  11. //விமலன்November 27, 2012 5:19 AM

    இதெல்லாம் சரிதான்,ஆனால் படக்கென 2005 லிருந்து ஏன் பாய்ச்சல் வேகத்தில் செல்ல வேண்டும்,இது தற்செயலா அல்லது ஏற்படுத்தப்பட்டதா? என்பதுவே இந்த நேரத்தின் மிக முக்கிய கேள்வியாக//

    2008ல் உருவான பங்குசந்தை சரிவைத்தொடர்ந்து தலைதூக்கிய கமடிட்டீ மார்கெட் என்று சொல்லகூடிய பொருள்வணிகத்தில் தலை தூக்கிய தரகு நிறுவனங்களும் அதன் விளம்பரபங்களும் மக்களை தங்கம் வாங்கி குவிக்கும் ஆசையை உந்தியதே காரனம். மேலும் 2008 ஆம் ஆண்டின் பங்குசந்தை சரிவிர்க்கு காரனம் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குவெளியீடும் அதனை தரகர்களும் ஊடகங்களும் பணத்தை பெற்றுகொண்டு ரூ 10 முகமதிப்புள்ள பங்குகளை வெளிவந்தவுடன் ரூ 1000 த்தை தாண்டும் என்ற பிரச்சாரமும், அதனைத்தொடர்ந்து ஒரே நாளில் 12 லட்ச்சம் கோடிக்கும் அதிகமான பணம் சந்தையில் இருந்து இந்த பங்குகளை வாங்க வெளியில் எடுத்ததுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி புரட்சித் தமிழன்.தங்கள் விளக்கம் நானறியாத பல உண்மைகளைப் புலப்படுத்திச்சென்றது.

      நீக்கு
  12. பதிவில் யவனர்களைப் பற்றியும் தங்கம் மிளகு பண்டமாற்று பற்றியும் சிறப்பான செய்தி.

    இப்போதெல்லாம் தங்க நகை கடைக்காரர்கள் Estimate Sheet ஐ மட்டுமே கொடுத்து சரியான பில்லை கொடுப்பதில்லை. மேலும் ஆன் லைன் வர்த்தகம் என்று கண்ணுக்கு தெரியாத உத்திகள். தங்கம் விலை மேலும் ஏறாமல் தடுக்க வேண்டியவர்கள் தடுக்க முனைவதில்லை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருத்தம் எனக்கும் உண்டு அன்பரே.
      தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள்.

      நீக்கு

  13. தங்கமான பதிவு முனைவர் ஐயா.

    (எல்லோரும் தங்க பஷ்பம் சாப்பிட ஆரம்பித்து விட்டார்களோ....!!!
    என்னா விலை ஏற்றம்...)

    பதிலளிநீக்கு