பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

வியாழன், 15 நவம்பர், 2012

திருமண அழைப்பிதழ் மாதிரி


தமிழ்  உறவுகளே..

இவ்வலையில் தமிழில் வடிவாக்கம் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ்களைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்துவருகிறேன்.

இணையத்தில் தேடும்போது கண்ணில்பட்ட இம்மாதிரியை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இம்மாதிரிகளை உலகு பரவிவாழும் பலரும் பயன்படுத்திவருகின்றனர்.

பதிவேற்றம் செய்த நண்பருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழில் வடிவாக்கம் செய்யப்பட்ட இதுபோன்ற அழைப்பிதழ்கள் உங்களிடம் இருக்கிறதா? gunathamizh@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்க தமிழ் நம் அடையாளம் என்பதை உலகுக்கு உணர்த்துவோம்.

22 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! தமிழ் செழிக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  3. நல்ல நோக்கம்! இந்த அழைப்பிதழ் அழகு தமிழில் பயணம்.. மணமகள் பெயர் தவிர்த்து. என் மாமனார் மிக்க தமிழ் பற்று உடையவர். சொல்லும், செயலும் தமிழுக்காகவே இருந்தது. என் திருமணம் தமிழில்தான் நடந்தது. என் பெயரில் வடமொழி உள்ளது என்பதால் உமா என்றே பெயர் சூட்டி அழைத்தார். நாங்கள் எங்கள் குழந்தைக்கு விருப்பபடி பெயர் சூட்டிக் கொண்டாலும் அவர் மட்டும் தமிழ் பெயர் வைத்துதான் அழைப்பார்.எங்கள் வீட்டு முகப்பில் உள்ள கல்வெட்டில் 22 வருடங்களாக தினமும் ஒரு திருக்குறளை பொருளுடன் எழுதி வைப்பார்.பெயருக்காகவும், புகழுக்காகவும் இல்லாமல் உண்மையான தமிழ் பற்றோடு ஆசிரிய பணியிலும் சரி ஓய்வு பெற்ற பிறகும் ஓயாமல் தமிழுக்காகவே உழைத்தார். தமிழே மூச்சாக வாழ்ந்த அவரை சமீபத்தில்தான் இழந்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி உஷா அன்பரசு.

      தங்கள் மாமனாரின் தமிழ்ப்பணி பாராட்டுதலுக்குரியது.

      நீக்கு
  4. ஒவ்வொரு அழைப்பிதழிலும் ஒரு மயிலிறகு இணைக்கப்பட்டிருக்குமா அய்யா. தேசியப் பறவை மயில் பாவமில்லையா?

    ​நாகு
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு
  5. இது என் பதிவுலக தம்பி “மயிலிறகு”மயிலனோட திருமண அழைப்பிதழ். ஆழமான சில வரிகளிலேயே வடிவமைத்த விதம் மிகவும் பிடிச்சிருந்தது எனக்கு.

    பதிலளிநீக்கு
  6. பயன் தரும் அருமையான முயற்சி
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  7. நல்லதோர் முயற்சியே வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முத்துமணி இராஜதுரை

      நீக்கு
  8. மருத்துவர் மயிலனின்
    திருமண அழைப்பிதழா...
    மிக அருமை...
    அவரின் கவிதைகள் போலவே
    மிகவும் அழகு....
    பகிர்வுக்கு நன்றிகள் முனைவரே...

    பதிலளிநீக்கு
  9. அற்புதமான ஒரு செயல் தொடருங்கள் ஆங்கில மோகம் உடையவர்கள் கண்டு தெளியட்டும்.

    பதிலளிநீக்கு