பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 30 அக்டோபர், 2012

உழைத்தால் மட்டும் போதுமா?


உழைப்பே உயர்வு தரும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
உழைக்காத காசு நிலைக்காது

என்றெல்லாம் அனுபவமொழிகள் உண்டு..

உழைப்பை இருவகைப்படுத்தலாம்..

அறிவு உழைப்பு - உடல் உழைப்பு

அறிவால் உழைப்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள்
உடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்

என்பது எனது அனுபவம்.

செக்குமாடு சுற்றிவருவதுபோல..

பலர் ஏன் உழைக்கிறோம்? எதற்காக உழைக்கிறோம்? எப்படி உழைக்கிறோம்?

என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்...

அதனால் உழைப்புத்திருடர்களும் இன்றைய சூழலில் நிறையவே தோன்றிவிட்டனர்.

குறுகிய காலத்தில் உயரத்துக்குவரவேண்டும்,
பெரிய பணக்காரராகவேண்டும் என்ற பேராசையில் அறிவு உழைப்பாளிகளில் சிலர் உடல் உழைப்பைத் திருடும் கயவர்களாகிவிட்டனர்.

காலம் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.
உழைப்புத்திருடர்களில் பலர் இன்று சிறைச்சாலைகளுக்குள்ளே கம்பியெண்ணிக்கொண்டிருக்கிறார்கள்..
சிலர் தலைமறைவாக ஓடி மறைந்திருக்கிறார்கள்..

 புரிந்துகொள்வோம்...

உழைப்பு மனிதனை ஏமாற்றுவதில்லை!
மனிதன் தான் உழைப்பை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்!
கடைசியில் அவனே ஏமாந்தும் போகிறான்..

அதனால்...

உழைத்தால் மட்டும்போதாது.. 
உணர்வோம்..

நாம் ஏன் உழைக்கிறோம்?
எதற்காக உழைக்கிறோம்?
எப்படி உழைக்கிறோம்?



 தொடர்புடைய இடுகைகள்














18 கருத்துகள்:

  1. //உடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்//

    மிக அருமையான வரிகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  2. மிக சிறப்பான கருத்துக்கள்! அந்த தேனி பற்றிய துணுக்கு மிகவும் சிறப்பு!நன்றி!

    பதிலளிநீக்கு

  3. உழைக்காமலேயே தேன் கிடைக்கும்போது அதை உற்பத்தி செய்யும் திறமை ஏன் இருக்க வேண்டும் எனும் கேள்வி உழைப்புத் திருடர்களுக்கு இருக்கலாம் அல்லவா. யார் என் உழைப்பைத் திருடினாலும் உழைக்கும் என் கலையைத் திருட முடியாது என்பது மகோன்னத மனப் பான்மையா. ? மனதில் தோன்றியது. எழுதிவிட்டேன். வெறுமே உழைத்தால் மட்டும் போதாது என்ற கருத்து உடன்பாடே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைக்காமல் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது..
      என்பதே எனது புரிதல் ஐயா...
      தங்கள் எண்ணமும் புரிகிறது..

      தங்கள் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றிகள்.

      நீக்கு
  4. உழைப்பு மனிதனை ஏமாற்றுவதில்லை!
    மனிதன் தான் உழைப்பை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்!
    கடைசியில் அவனே ஏமாந்தும் போகிறான்..

    அருமையான வரிகள்...
    ஒருவன் உழைப்பில் மற்றொருவன் வாழ்கிறான்! இப்பொழுது நாட்டில்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பல கருத்துக்கள்... நன்றி... tm8

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/3.html) சென்று பார்க்கலாம்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  6. ////அறிவால் உழைப்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள்
    உடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்///

    மிக அருமையான கருத்து. உழைப்பைப்பற்றி நல்லதொரு பதிவிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அறிவால் உழைப்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள்
    உடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்////

    அருமை குருவே, உழைப்பை மிகச்சிறப்பாக பாகுபடுத்தி விளக்கியுள்ளீர்கள்.
    ****************************
    உங்களைப்போன்ற மூத்த பதிவர்களின் பதிவுகளை வாசிக்கும் போதே என்னைப்போன்றவர்களுக்கு எழுதவேண்டும் என்ற ஆசை தூண்டுகின்றது.. நன்றிகள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி குமரன்.

      தங்கள் தளம் கண்டேன் அருமை. தொடர்க..

      நீக்கு
  8. நல்ல பதிவு. தேனீக்கள் பற்றிய குறிப்பு மிக அருமை!

    பதிலளிநீக்கு
  9. நல்ல பல வரிகள் + கருத்துக்கள்...

    நன்றி...
    tm9

    பதிலளிநீக்கு