நான் பள்ளியில் படித்த காலத்தில், பள்ளியிலிருந்தே திரையரங்கத்துக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு இயற்கை, அறிவியல், விழிப்புணர்வு தொடர்பான ஆவணப்படங்கள் காண்பிப்பார்கள்..
இப்போதும் இந்த வழக்கம் சில பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர்களைத் திரையரங்கத்துக்கு அழைத்துச்சென்று “எந்திரன்” போன்ற படங்களைக் காண்பிக்கிறார்கள்.
திரைப்படம் என்பது ஆற்றல் வாய்ந்த ஊடகமாக விளங்குகிறது. இன்றைய தலைமுறையினர் அதிகமாகவே திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். இந்நிலையில் என் பார்வையில் மாணவர்கள் தவறவிடாமல் பார்க்கவேண்டிய சில படங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.
- கல்வித்துறை சார்ந்தவர்கள் மாணவர்களை திரையரங்கு அழைத்துச்சென்று தான் காண்பிக்கவேண்டும் என்றில்லை. இப்போதெல்லாம் கல்வி நிறுவனங்களிலேயே எல்சிடி உள்ளிட்ட திரையரங்கு வசதிகள் வந்துவிட்டன. அதனால் மாணவர்களின் எதிர்கால நலம் கருதி இப்படங்களை மாணவர்கள் காண வழிவகை செய்தல் வேண்டும்.
- பெற்றோர்களும் பிள்ளைகளுக்காக நிறையவே செலவுசெய்கிறார்கள். கீழ்காணும் திரைப்படங்களை குறுவட்டு (டிவிடி) களாகவாவது தன் குழந்தைகளுக்கு வாங்கித்தந்து கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில், தொடர் நாடகம் பார்க்கும் நேரத்தில் குடும்பத்தோடு அமர்ந்து இந்தப் படங்களைக் காணலாம்.
- வலையுலக உறவுகளே என் பார்வையில் சிறந்ததாகக் கருதும் சில படங்களை மொழிப்பாகுபாடின்றி பட்டியலிட்டிருக்கிறேன். இதுபோல தங்கள் பார்வையில் மாணவர்கள் காணவேண்டிய படங்களாத் தாங்கள் கருதும் படங்களைப் பரிந்துரை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கீ்ழ்காணும் படங்களில் தாங்கள் பார்த்த படங்கள் மனதில் பதிந்த சிந்தனைகளையும் தாங்கள் பதிவு செய்தால் இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இந்தப் படங்களைப் பற்றிய விமர்சனங்கள் நிறையவே இணையப்பரப்பில் எழுதப்பட்டதால் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் ஒரே ஒரு சிந்தனையை மட்டும் தங்கள் முன் வைக்கிறேன்.
 |
அகிம்சை |
 |
கல்வி |
 |
சட்டம் |
 |
பகுத்தறிவு |
 |
விடுதலை |
 |
நட்பு |
.jpg) |
தமிழர் நம்பிக்கைகள் |
 |
தன்மானம் |
 |
தன்னம்பிக்கை |
 |
அன்பே கடவுள் |
 |
மாணவர் உலகம் |
 |
கல்வியா? விளையாட்டா? |
 |
இன்றைய கல்வியின் நிலை |
 |
நாட்டுப் பற்று |
 |
தன்னையறிதலே கல்வி |
தேவையான பட்டியல்
பதிலளிநீக்குநன்றி முனைவரே
நீக்குசிறந்த தேர்வு...
பதிலளிநீக்குஉங்களின் தளம் மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_3.html) சென்று பார்க்கவும்...
நன்றி…
மிக்க மகிழ்ச்சி நண்பரே கண்டேன் மகிழ்ந்தேன்.
நீக்குரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர் போன்ற அமீர் படங்களைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பழைய ஆங்கிலப் படங்களில் ட்ரெஷர் ஐலன்ட், மெக்கனாஸ் கோல்ட் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குதாங்கள் சொன்ன படங்களை நானும் பார்த்ததில்லை நண்பரே பார்க்கிறேன்.
நீக்குதங்கள் பரிந்துரைக்கு நன்றிகள்.
சிறந்த தேர்வு முனைவர் அவர்களே!
பதிலளிநீக்குத.ம.8
நன்றி குட்டன்.
நீக்குசக்தே,கர்ணன் தவிர மற்ற அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன்.நல்லதொரு பட்டியல்.
பதிலளிநீக்குவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.
நீக்கு
பதிலளிநீக்குநல்ல நல்ல படங்களைத் தேர்வு செய்து
அதன் கீழ் அதன் பயனையும் அளித்திருக்கிறீர்கள்.
நான் அம்பேத்காரை இன்னும் பார்க்கவில்லை.
பார்க்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி முனைவர் ஐயா.
அனைத்துமே அருமையான படங்கள்தான். என்னைக் கவர்ந்த படம் 'பாரதி'தான். வறுமை தின்றுவிட்ட அந்த மகாகவியின் கவிதைக்காதல் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு முனைவரே! தொடர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதன்னை வறுமை தின்றாலும் தன் கொள்கைகளை சரியாக எடுத்துச்சொன்ன பாரதியை மறக்கமுடியுமா...
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே.
நல்ல தேர்வு..முனைவர் ஆச்சே சும்மாவா!!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி படைப்பாளி.
நீக்குஅருமையான பகிர்வு
பதிலளிநீக்குநன்றி அன்பரே.
நீக்குஅருமையான தேர்வு நண்பரே.
பதிலளிநீக்குதங்கள் கவனத்திற்கு மேலும் சில படங்கள்.
தந்தை மகள் பாசத்திற்காக அபியும் நானும்,
வீரத்திற்காக வீரபாண்டிய கட்டபொம்மன்,
ஔவையார்,
வாகை சூட வா
அருமையான படங்களைக் குறிப்பிட்டீர்கள் நண்பரே..
நீக்குநன்றி.
அருமையான தேர்வு நண்பரே.
பதிலளிநீக்குதங்கள் கவனத்திற்கு மேலும் சில படங்கள்.
தந்தை மகள் பாசத்திற்காக அபியும் நானும்,
வீரத்திற்காக வீரபாண்டிய கட்டபொம்மன்,
ஔவையார்,
வாகை சூட வா
சிறப்பான தேர்வு.தோனி படத்திற்கு மட்டும் 'கல்வியா?விளையாட்டா?'என்பதை விட வேறு வகையில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குஉயரிய சிந்தனை.அதைச் சிறந்த விதத்தில் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி.
தேர்வு செய்த படங்கள் அத்தனையுமே உயரிய பாடங்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்
நீக்குநன்றி முருகேஸ்வரி ராஜவேல்
right choice
பதிலளிநீக்குநன்றி நண்பா.
பதிலளிநீக்குவணக்கம் முனைவரே! சமீபத்தில் என் பிள்ளைகளுடன் இரண்டு படம் பார்த்தேன். இரண்டும் ஆங்கிலம். குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கக்கூடிய படங்கள்.அவை சொல்லும் செய்தி அருமை. உங்களின் இந்த பதிவு நினைவு இருந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்கு1. Lassie Come Home - சிறுவர்களின் செல்லப்பிராணிகளுடனான உறவைச் சித்தரிக்கும் படம். செல்லப்பிராணிகள் வைத்துக்கொள்வதில் உள்ள பொறுப்பை சிறுவர்கள் உணர்வார்கள். அன்பும் கடமை உணர்ச்சியும் இருந்தால் எந்தவொரு தடையையும் தாண்டிவிடலாம் என்று சொல்லும் படம். பிராணிகளின்(நாயின்) அன்பையும் உணர வைக்கிறது.
2. Swiss Family Robinson - அன்பு நிறைந்திருக்கும் நல்லதொரு குடும்பம் எந்தச் சூழ்நிலையிலும் சேர்ந்து நின்று வாழ்வை வெற்றியாக இனிமையாக மாற்றலாம் என்று அழகாகச் சொல்லும் படம். கடல் கொந்தளிப்பில் கப்பல் சிதைந்ததால் ஒரு தீவில் சேரும் ஒரு குடும்பம் எப்படி அந்தச் சூழலை மகிழ்ச்சியானதாக மாற்றி, அங்கு வந்த கடற்கொள்ளையர்களை எப்படி ஒன்றாக நின்று வெற்றி கொண்டனர் என்பதைச் சொல்லும் படம்.