வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

எல்லாம் தமக்குரியர்!



நாம் பிறக்கும்போது எதையுமே எடுத்துவரவில்லை, 
எதையும் எடுத்துச்செல்லப்போவதும் இல்லை. 
என்றாலும் எல்லாவற்றையும் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும் என்றே ஆசையில் வாழ்கிறோம்.

     
         மூவேந்தர்களும் பறம்பு மலையைச் சூழ்ந்து போர்தொடுத்தபோது கபிலர் அவர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு பாடல் வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ளவேண்டிய நுட்பத்தை அழகாகப் புலப்படு்த்திச் செல்கிறது.

வஞ்சனையால் அடைய நினையாது போரிட்டு வெல்லும் இயல்புடைய மூவேந்தரும் ஒன்று கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை உங்களால் பெறமுடியாது. 

ஏனென்றால் குளிர்ச்சி பொருந்திய நன்னாடாகிய பறம்பு நாடு முந்நூறு ஊர்களைக் கொண்டது. அந்த முந்நூறு ஊர்களையும் பாரியிடம் பரிசிலர்கள் பெற்றுவிட்டனர். 

ஒருவேளை நீங்கள் பாடிக் கொண்டு பரிசிலராக வந்தால் நீங்கள் பெறுவதற்காக யாமும், பாரியும் உள்ளோம். மேலும் மலையும் உள்ளது என்கிறார் கபிலர்.


புறநானூறு 110 -  கபிலர் 

ஆங்கில மொழிபெயர்ப்பு

Though the three of you with your murderous and victorious armies
unite in your enmity, Parampu will be very difficult to take!
There are three hundred villages in the good land
of cool Parampu, and all three hundred belong to those who have
come to him in their need! But if you will go
and you will sing to him, you win us and Pāri and his mountain.                      

Translated by George Hart

கடந்து அடு தானை – victorious, killing armies ,
மூவிரும் கூடி – the three of you meet, 
உடன்றனிர் ஆயினும் – and even if you join together 
பறம்பு கொளற்கு அரிதே – it is difficult to get Parampu, 
முந்நூறு ஊர்த்தே – it has 300 town, 
தண்பறம்பு நல்நாடு – cool Parampu country,
முந்நூறு ஊரும் – 300 towns,
 பரிசிலர் பெற்றனர் – belong to those who got gifts (fom him), 
யாமும் பாரியும் உளமே – you’ll win Pari and us,
குன்றும் உண்டு – you’ll get the mountain, 
நீர் பாடினிர் செலினே – if you go and sing to him


தொடர்புடைய இடுகை




21 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.புறநானூறு பாடலும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அன்பே சிவம். இக்காலத்திற்கு தேவையான ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
  3. பாடலும் அதற்கான விளக்கமும் அருமை முனைவரே...

    பதிலளிநீக்கு
  4. அன்பினால் எதையும் வெல்லமுடியும் . நல்ல விளக்கம்

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு குறளோடு விளக்கியது சிறப்பு... நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  6. புறநானூற்றை சிறப்பாக எளிமையாக பகிர்ந்து வரும் தங்கள் தொண்டு சிறப்பானது! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    பதிலளிநீக்கு
  7. வாழ்வின் ஆதாரமே அன்புதான்.எப்போதும்போல குறளோடு இணைத்த பதிவு அருமை !

    பதிலளிநீக்கு