வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

உலவிகளின் போர்.


ஆரம்ப காலத்தில் இணைய உலகிற்கு வந்தபோது, இன்டர்நெட் எக்சுபுளோர் மட்டும் தான் உலவி என்று நினைத்துப் பயன்படுத்திவந்தேன். அதன் வேகம் வசதிகள் இரண்டுமே குறைவாகவே இருந்தன. அந்தக் காலத்தில் நெருப்புநரி உலவி (மொசில்லா பயர்பாக்சு)யைப் பயன்படுத்திப் பார்த்து வியந்துபோனேன். அதனைத்தொடர்ந்து சபாரி, ஓபேரா, நெட்சுகேப் என பல்வேறு உலவிகளின் சிறப்புகளையும் அறிந்து தற்போது ஒரு வருடங்களாக குரோம் மற்றும் நெருப்புநரிஉலவியை மட்டுமே பயன்படுத்திவருகிறேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் பயன்படுத்தி வந்த உலவிகள்..

இன்டர்நெட் எக்சுபுளோர் -1 ஆண்டு
நெருப்புநரி உலவி - நான்கு ஆண்டுகள்
சபாரி - அவ்வப்போது.
ஓபேரா- அவ்வப்போது..
குரோம் - கடந்த ஒரு ஆண்டுகளாக..

என் வலைப்பதிவைப் பார்வையிட்ட பார்வையாளர்கள் பயன்படுத்திய உலவிகளின் விவரம்..
  • ஒவ்வொரு உலவிகளும் ஒவ்வொருவிதத்தில் தனிச்சிறப்புடையனவாகவே திகழ்கின்றன. என்றாலும் நான் உலவிகளிடம் அதிகமாக எதிர்பார்ப்பது வேகம்.
  • எபிக் என்னும் உலவி வந்து பிரபலமடைந்தபோது நானும் அதனைப் பயன்படுத்திப் பார்த்து வியந்திருக்கிறேன். நான் எதிர்பார்த்த எல்லாவசதிகளுமே அதில் இருந்தன. இருந்தாலும் அதைக் காட்டிலும் பிற உலவிகள் புது வசதிகளைத் தரும்போது அதை மறந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இணைய உலகில் இவ்வாறு உலவிகளுக்கிடையே நடக்கும் போரில் நாம் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்று மதிப்பீடு செய்யும் முயற்சியே இவ்விடுகை.

தொடர்புடைய இடுகை




18 கருத்துகள்:

  1. நல்ல தகவல்கள்! நான் பயர் பாக்ஸ், குரோம் இரண்டும் பயன் படுத்துகிறேன்! குறைசொல்ல ஒன்றுமில்லை!

    பதிலளிநீக்கு
  2. நானும் IE, Firefox, Chrome என மாற்றி மாற்றி உப்யோகித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக Chrome தான்.

    பதிலளிநீக்கு
  3. கிரோம் உலவி மிக ஸ்லோ ஆக இருக்கிறது - என்னைப் பொறுத்தவரை! எனவே நான் நெ.நெ தான்!!! :)))

    பதிலளிநீக்கு
  4. உலவிகளிடம் நான் எதிர்பார்ப்பது வேகம் அல்ல, விவேகம்.

    திறநிலை (Open Source) உலாவியாக எல்லா இயங்குதளங்களையும் ஆதரிக்க வேண்டும். நமது பாதுகாப்பிற்மு அரணாக இருக்க வேண்டும். நமது பங்களிப்பையும் ஏற்பதற்குத் தயாராய் இருக்க வேண்டும்.
    தமிழ் வாசிப்பிற்கும், எழுத்திற்கும் உகந்த்தாக இருக்க வேண்டும்.

    இவற்றுக்கு மிகவும் பொருத்தமான உலவி பயர்பாக்ஸ் தான்.
    இதனையே அதிக நேரம் பயன்படுத்துகிறேன்.

    அலைபேசியில் ஓபரா மினியும், சில நேரங்களில் குரோமும் பயன்படுத்துவதுண்டு.

    பதிலளிநீக்கு
  5. ஓராண்டிற்கும் மேலாக குரோம் தான் பயன்படுத்தி வருகிறேன் நண்பரே! நல்ல வேகம்!

    பதிலளிநீக்கு
  6. 700 followers பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே! விரைவில் ஆயிரம் ஆகட்டும்!

    பதிலளிநீக்கு
  7. நல்ல தகவல்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு